Get Mystery Box with random crypto!

TNPSC AE - Selected Candidates வணக்கம் நண்பர்களே... இந்த உத | TnpscBooks

TNPSC AE - Selected Candidates

வணக்கம் நண்பர்களே...

இந்த உதவிப்பொறியாளர் எழுத்துத்தேர்வில் தேர்ச்சிபெற்று அடுத்த கட்டத்திற்கு முன்னேறியதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். .

தேர்வு எழுதிய 40000-ற்கு மேற்பட்டவர்களில் 2000பேரில் ஒருவராக நீங்கள் தேர்வு செய்யப்பட்டபோது நீங்கள் பாதி வெற்றியடைந்து விட்டீர்கள், இந்த பாதி வெற்றியை முழுவெற்றியாக மாற்றும் தருணம் இது..

அடுத்து நீங்கள் என்ன செய்யவேண்டும் என்றால் தங்களுடைய பள்ளி, கல்லூரி சான்றிதழ்களை தயார் நிலையில் வைத்துக்கொள்ளுங்கள்.. ஏதேனும் சேதமடைந்திருந்தாலோ அல்லது காணாமல் போயிருந்தாலோ இன்றே அதை திரும்ப பெறுவதற்கான முயற்சியில் இறங்குங்கள்..

நடந்துமுடிந்த எழுத்துத்தேர்வானது நாம் எவ்வாறு அதை தேர்வு அறையில் எழுதினோம் என்பதை பொறுத்தது, ஆனால் இன்டர்வியூ என்பது நமக்கென்று ஒதுக்கப்பட்ட 15 முதல் 20 நிமிடங்களில் எவ்வாறு தெளிவாக, பதட்டப்படாமல், தைரியமாக, தெளிவாக தன்னுடைய பதிலை கூறுகிறோம் என்பதை பொறுத்ததே.. கேள்வி கேட்பவர்கள் நம்மிடம் சரியான பதிலை எதிர்பார்ப்பதில்லை, அந்த சூழ்நிலையை எவ்வாறு கையாளுகிறோம் என்பதையே எதிர்பார்க்கின்றனர்... எனவே நாம் சொல்வது தவறான பதிலாக இருக்குமோ என பயப்படத்தேவையில்லை...

Follow TELEGRAM Group http://bit.ly/tnpscbooks_official

எழுத்துத்தேர்வில் 1:3/1:4-ல் தானே கூப்பிட்டு இருக்கிறார்கள் நமக்கு வேலை கிடைக்குமா கிடைக்காதா என்ற தேவையில்லாத சிந்தனைகளை மனதில் வளர்க்காதீர்கள்... அவ்வாறு உங்களிடம் பேசுபவர்களிடமிருந்து சற்றே விலகியிருங்கள்..

எழுத்துத்தேர்வு என்பது முடிந்துபோன ஒன்றாகும்..அதை இனிமேல் யார்நினைத்தாலும் மாற்றமுடியாது..எனவே நாம் writtenல் எவ்வளவு மார்க் வாங்கியிருப்போம் ஒருவேளை கம்மியாக வாங்கியிருப்போமோ என்றெல்லாம் நினைக்காமல் இன்டர்வியூவில் முழுக்கவனம் செலுத்துங்கள்...

தற்போதைய முறைப்படி இன்டர்வியூ ஆனது 60 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது..இதனை ஐந்து slot ஆக பிரிக்கின்றனர். முதல் slotற்கு 45 மதிப்பெண்களும், இரண்டாம் slotற்கு 40.5 மதிப்பெண்களும், மூன்றாவது slotற்கு 36 மதிப்பெண்களும் நான்காவது slotற்கு 31.5 மதிப்பெண்களாகவும்,ஐந்தாவது slotற்கு 27 மதிப்பெண்களாகவும் பிரிக்கப்படுகிறது.. ஒவ்வொரு slotற்கும் 4.5 மதிப்பெண்கள் வித்தியாசம்...0.25 or0.5 மதிப்பெண்ணில் வேலையினை தவறவிட்டவர்கள் நிறையபேர், எனவே அனைவருடைய குறிக்கோளும் இன்டர்வியூவில் முதல் slot மதிப்பெண் வாங்குவதிலேயே இருக்க வேண்டும்..

இன்டரவியூவில் ஒரு கேள்வி கேட்கும்போது அதற்கு பதில் தெரியவில்லை எனில் "சாரி சார் எனக்கு தெரியவில்லை, refer பண்ணிக்கிறேன்" என்று கூறுங்கள். மாறாக தெரிந்தமாதிரி காமித்துக்கொண்டு உளறவேண்டாம், தெரயும் என பொய் சொல்லி தடுமாறவும் வேண்டாம்..

Follow TELEGRAM Group http://bit.ly/tnpscbooks_official

நமக்கு முன்னே அமர்ந்து நம்மிடம் கேள்வி கேட்பவர்கள் நம்மை போன்ற ஆயிரக்கணக்கான candidatesனை பார்த்திருப்பார்கள், நம் முகத்தை பார்த்தே கணிக்கும் திறன் கொண்டவர்கள், எனவே நமக்கு பதில் தெரிந்தால் தெரிந்த பதிலை தெளிவாக, தைரியமாக,பதட்டம் இல்லாமல் சொல்லுங்கள், ஒருவேளை பதில் தெரியவில்லை எனில் தெரியவில்லை என்றே கூறுங்கள், தவறேதுமில்லை...

பெரும்பாலும் பலருக்கு வரும் சந்தேகம் இன்டர்வியூவில் கேட்கும் கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் பதில் கூறவேண்டுமா என்பதே.. நாம் ஆங்கிலத்தில்தான் கூற வேண்டும் என்ற கட்டாயமில்லை.. ஒருவேளை அவர்கள் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டாலும் நாம் தமிழிலே பதில் அளிக்கலாம்...

நீங்கள் இன்டர்வியூ அறைக்குள் நுழையும் முதல் நொடி முதல் இன்டர்வியூ முடிந்து வெளியேறும் கடைசி நொடிவரை நாம் கண்காணிக்கப்படுகிறோம் என்பதனை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்..நாம் அணிந்திருக்கும் ஆடை, கையில் கட்டியிருக்கும் கடிகாரம், காலில் அணிந்திருக்கும் shoe, நெற்றியில் வைத்திருக்கும் பொட்டு/திருநீறு முதற்கொண்டு அனைத்தும் கண்காணிக்கப்படுகிறது..

இன்டர்வியூ அறைக்குள் நுழையும் போது உள்ளே வரலாமா சார்/மேடம் என கேட்டு உள்ளே செல்லுங்கள்.. உள்ளே சென்றவுடன் அனைவருக்கும் தனித்தனியே காலை/மதிய வணக்கம் தெரிவியுங்கள்.. பின்னர் அவர்கள் அமரசொன்னவுடன் நன்றி கூறி அமருங்கள், ஒருவேளை அவர்கள் அமர சொல்லவில்லை எனில் அமரலாமா என கேட்டு உட்காருங்கள்.. உட்காரும் போது நாற்காலியினை இழுத்து தேவையில்லாத இரைச்சலை உண்டாக்க வேண்டாம்..

ஒருவர் கேள்வி கேட்டு நீங்கள் பதில் சொல்லிக்கொண்டிருக்கும்போது வேறோருவர் கேள்வி கேட்டால் இவருக்கு பதில் முழுமையாக சொல்லிவிட்டே அடுத்த நபரின் கேள்விக்கு பதில் சொல்ல ஆரம்பியுங்கள்....

நாம் என்ன பதில் செல்கிறோமோ அதிலிருந்து தான் அவர்களின் அடுத்தகேள்விகள் வரும். எனவே நாம் சொல்லும் பதில்களை சற்றே யோசித்து தெளிவாக சொல்லுவோம்

Follow TELEGRAM Group http://bit.ly/tnpscbooks_official