Get Mystery Box with random crypto!

பெரும்பாலும் பலருக்கு இன்டர்வியூக்கு என்ன படிக்க வேண்டும் எவ்வ | TnpscBooks

பெரும்பாலும் பலருக்கு இன்டர்வியூக்கு என்ன படிக்க வேண்டும் எவ்வாறு தயாராகவேண்டும் என்ற சந்தேகம் இருக்கும்..வழக்கம்போல இதற்கும் சிவில் மற்றும பொது அறிவினை நன்கு தெரிந்துகொள்ள வேண்டும். சிவிலினை பொறுத்தவரை ஃபார்முலா மற்றும் values போன்றவற்றில் கவனம் செலுத்தாமல் technical termனை பற்றி அதிகமாக கற்றுக்கொள்ளுங்கள்..

முதலில் நம் notificationல் உள்ள highways, WRD, Buildings, RD, Housing board போன்ற துறைகளை பற்றி overview தெரிந்துகொள்ளுங்கள்..

எந்த துறையே நீங்கள் தேர்ந்தெடுக்க விரும்புகிறீர்கள் என கேள்வி கேட்டால் , எந்த துறையே தேர்ந்தெடுக்கலாம் என நீங்கள் முன்னரே திட்டமிட்டு வைத்திருந்து அந்த துறையினை பற்றி அதிகம் தெரிந்துகொள்ளங்கள்.இப்போது நமது நணபர்கள் அனைத்து துறையிலும் வேலைபார்ப்பதால் சந்தேகங்களை எளிதில் கேட்டு தெரிந்துகொள்ளலாம்.

ஒருநாள் முழுவதும் என்ன prepare பண்ணுகிறோமோ அதனை குறைந்தது ஒரு மணிநேரமாவது மற்றவர்களுடன் discuss பண்ணுங்கள். ஏனெனில் இன்டர்வியூ என்பது நாம் மற்றவர்களிடம் தம் பதிலை எப்படி பதிவு செய்கிறோம் என்பதை பொறுத்ததே..பெரும்பாலும் இன்டர்வியூவில் introduce ur self என்ற கேள்வி தான் முதலில் இடம்பெறும். எனவே அதில் அதிக அளவில் கவனம் செலுத்தி நீங்கள் அடிக்கடி சொல்லி பாருங்கள், மற்றவர்களிடம் சொல்லி பழகுங்கள். ஏனெனில் பழக பழகதான் பாலும் புளிக்கும்.

அம்மா, அப்பா பற்றி கேள்வி வந்தால் அம்மா home makker சொல்லலாம், அப்பா விவசாயம் என சொன்னால் விவசாயத்தை பற்றியும் தெரிந்துகொள்ளுங்கள். இப்போது உங்கள் நிலத்தில் என்ன விவசாயம் பண்றீங்க, என்ன உரம் போடுறீங்க எவ்வளவு விளைச்சல் இதுமாதிரி...

உங்களது சொந்த மாவட்டத்தினை பற்றி நிறைய தெரிந்துகொள்ளுங்கள், கல்யாணம் ஆனவர்களாக இருந்தால் கணவரின் மாவட்டம் பற்றியும் தெரிந்துகொள்வது நல்லது. தன் மாவட்டத்தின் சிறப்பு, பெயர்க்காரணம், தன் மாவட்டத்தில் பாயும் ஆறுகள்,முக்கிய தொழிற்சாலைகள், முக்கிய சாலைகள் மற்றும் சாலையின் நம்பர்(NH/SH), தனது மாவட்டத்திலுள்ள சுதந்திரபோராட்ட வீரர்கள் மற்றும் பல.....

உங்களது பொழுதுபோக்கு என்னவென்று கேட்டால் என்ன சொல்லவேண்டும் என்பதை முன்கூட்டியே திட்டமிட்டுக்கொண்டு அதை பற்றி நிறைய தெரிந்து கொள்ளுங்கள். உதாரணமாக புத்தகம் படிப்பது என்று நீங்கள் சொன்னால் நிறைய புத்தகம் மற்றும் ஆசிரியர்கள் பற்றி தெரிந்து கொள்ளவேண்டும்.. சமையல் பிடிக்கும் என நீங்கள் கூறினால் சமையலினை பற்றியும் நீங்கள் அதிகம் தெரிந்துகொள்ள வேண்டும்

தற்போதைய நடப்பு நிகழ்வுகள் பற்றி அதிகம் தெரிந்து கொள்ளுங்கள். தினமும் செய்தித்தாள் படிங்கள் சில YouTube சேனலினை தொடர்ந்து follow பண்ணுங்க..பாரப்பதை படிப்பதை ஒரு நோட்டில் எழுதிவைத்து திரும்ப திரும்ப அதை பாருங்கள்..நீங்கள் இனிமேல் சமுதாயத்தில் பார்க்கும், கேக்கும் அனைத்தையும் ஒரு கேள்வியாக பாருங்கள்...

Opinion கேள்விகள் சிலநேரம் வர வாய்ப்புண்டு. அவ்வாறு வரும்போது நடப்பு ஆட்சிக்கு எதிர்மறையாக கூறுவதை தவிருங்கள்.

Follow TELEGRAM Group http://bit.ly/tnpscbooks_official

தற்போதைய MLA மற்றும் அமைச்சர்களின் பெயர்களை கேக்கும்போது *மாண்புமிகு திரு* என்று சொல்லி அவரது பெயரை சொல்லி பழகுங்கள். இன்றைய ஒவ்வொரு துறைகளின் அமைச்சர் பெயரினையும் தெரிந்து கொள்ளுங்கள்..உங்கள் தொகுதி எம்.எல்.ஏ பற்றி அதிகம் தெரிந்து கொள்ளுங்கள்..

நடிப்பு மாதத்தில் குடியரசு தின விழா வருவதால் அதனை பற்றி நிறைய தெரிந்து கொள்ளுங்கள், அன்றைய தினத்தில் கிராமசபை கூட்டம் நடைபெறுவதால் அதனை பற்றியும் நிறைய தெரிந்து கொள்ளுங்கள்.. தற்போது வருடத்தில் 5 நாட்களில் கிராமசபை கூட்டம் நடைபெறுகிறது.

எந்த கல்லூரியில் படிததீர்கள் என்ற கேள்வி கேட்டால் நாம் அண்ணா யுனிவர்சிட்டி என பதில் சொல்லும்போது அறிஞர் அண்ணாவினை பற்றி சொல்லுங்கள் என்ற கேள்வி கூட வரலாம் எனவே முக்கிய நபர்களை பற்றி அதிகம் தெரிந்துகொள்ளுங்கள்..குறிப்பாக பெண் விடுதலை போராட்டவீரர்கள் பற்றி அதிகமாக தெரிந்து கொள்ளுங்கள். NSS,NCC,Engineers day பற்றி நிறைய தெரிந்தது கொள்ளுங்கள்..

உங்களுடைய பெயரினை பற்றி படியுங்கள்.. குறிப்பாக உங்கள் பெயர் பாரதி எனில் மகாகவி பாரதியினை பற்றி கேள்விகள் வரலாம். உங்களது பெயருக்கு என்ன பெயர்காரணம் என கூகுளில் தேடிப்பிடித்து தெரிந்து கொள்ளுங்கள். உங்களது பிறந்ததேதியின் சிறப்பினை பற்றியும் தெரிந்துகொள்ளுங்கள்.. உதாரணமாக உங்கள் பிறந்தநாள் ஜுன் 21 எனில் அன்று யோகா தினம்..எனவே அதனை பற்றி தெரிந்துகொள்வது அவசியம்.

உங்கள் மாவட்டத்தில் ஏதேனும் dam, reservoir, இருந்தால் அதனை பற்றி முழுவிவரம் தெரிந்துகொள்ளுங்கள். மிகப்பெரிய/ மிகச்சிறிய சிறப்புகளை தெரிந்து கொள்ளுங்கள்.. உதாரணமாக மிகப்பெரிய ஆறு, மிகப்பெரிய மலை, மிகப்பெரிய மண்அணை இதுமாதிரியான கேள்விகள்..