எஸ்எஸ்சி எனும் மத்திய பணியாளர் ஆணையம் SSC தேர்வு, தமிழில் எழுத | TnpscBooks

எஸ்எஸ்சி எனும் மத்திய பணியாளர் ஆணையம் SSC தேர்வு, தமிழில் எழுத அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் கணினி வழி, பல்திறன் மல்டி டாஸ்கிங்  (MTS) தேர்வு, தமிழில் எழுத அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே இந்த SSC தேர்வு எழுதப்பட்டுவந்த நிலையில், தற்போது தமிழ் உட்பட 13 மொழிகளில் எழுத அனுமதி கிடைத்துள்ளது.

SSC மல்டி டாஸ்கிங் (பல்திறன்) தேர்வு, காலியாக உள்ள 11,409 பணியிடங்களை நிரப்பும் வகையில் நடைபெறவுள்ளது. இந்த தேர்வு இனி தமிழிலும் எழுத, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அனுமதி அளித்துள்ளது.