🔥 Burn Fat Fast. Discover How! 💪

கிரிக்கெட் வீரரின் கெளரவம் திரு. பிலிப் ஹியூஸ் : நவம்பர் 25,2 | கி ல் லா டி க ள்

கிரிக்கெட் வீரரின் கெளரவம் திரு. பிலிப் ஹியூஸ் :

நவம்பர் 25,2014 :

சிட்னி கிரிக்கெட் மைதானத்தில், ஆஸ்திரேலியாவின் உள்ளூர் போட்டியான ஷெஃபீல்டு ஷீல்டு போட்டி நடந்துகொண்டிருந்தது.

சவுத் ஆஸ்திரேலியா அணிக்காக இவர் 63 ரன்களுடன் களத்தில் விளையாடி கொண்டிருந்தார். நியூ சவுத் வேல்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் சீன் அபாட் வீசிய பவுன்சர் பந்து, அவரின் இடது காதுக்கு கீழே (ஹெல்மெட் கீழே) தாக்கி அப்படியே நிலைகுலைந்து மயங்கி விழுந்தார்.

மைதானத்தில் முதல் உதவி அளிக்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். போட்டியும் உடனடியாக நிறுத்தப்பட்டது

மூன்று நாட்கள் மருத்துவமனையில் சுயநினைவை இழந்து கோமாவில் இருந்தார். தன்னுடைய 26வது பிறந்தநாளை மூன்று நாட்களில் (நவ:30) கொண்டாட இருந்த நிலையில்,நவம்பர் 27 அன்று உயிரிழந்தார்.

ஒரே ஒரு பந்து ,நொடிக்கும் குறைவான நேரத்தில்.அவரின் உயிரையே பறித்துவிட்டது.

இந்த சம்பவம்,கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கடும் சோகத்தில் ஆழ்த்தியது.

டிசம்பர் 3 ஆம் தேதி,அவரின் இறுதி சடங்கு நடந்தது.அவரது நெருங்கிய உடன்பிறவா சகோதரர்களான/ ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர்களான மைக்கேல் கிளார்க், ஆரோன் பின்ச் அவரது சவப்பெட்டியை அழுதுகொண்டே தூக்கிச்சென்ற காட்சி பார்க்கும் அனைவரின் மனதையும் உலுக்கியது.

மறைவுக்கு பின் நடந்த மாற்றங்கள் :

பொதுவாக கிரிக்கெட் போட்டியில் ஒரு வீரருக்கு அடிபட்டு பெவிலியன் திரும்பினால் போட்டியின் அட்டவணையில் retired hurt என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.

இவர் 63 ரன்களில் அடிபட்டு பெவிலியன் திரும்பி மரணித்ததால், retired hurt என்பதற்கு பதிலாக 63 நாட் அவுட் என்று மாற்றப்பட்டது.

இந்தியா,ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டி தொடர் டிசம்பர் முதல் நடப்பதாக இருந்தது. இந்த சோக நிகழ்வால் போட்டி தள்ளிவைக்கப்பட்டது.

போட்டி நடந்த போது இறந்த இவரின் பெயர் 13வது வீரராக சேர்க்கப்பட்டது.

போட்டி நடப்பதற்கு முன்பு, இவரை கௌரவிக்கும் விதமாக 63 நொடிகள் மைதானத்தில் அனைவரும் எழுந்து நின்று கைதட்டினார்கள்.

ஆஸ்திரேலியா விளையாட்டு வீரர்கள் அனைவரும், இவரின் டெஸ்ட் கேப் எண்ணனான 408 நம்பரை தங்களின் பேஜ்ஜிற்கு கீழ் தைத்துவைத்திருந்தனர். மைதானத்திலும் 408 என்று பெயிண்ட் செய்யப்பட்டிருந்தது.

போட்டியில் ஆஸ்திரேலியா வீரர்களான ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர், 63 ரன்களை கடந்த போது பேட்டை உயர்த்தி காட்டி அவரை நினைவுகூர்ந்தனர்.

ஆஸ்திரேலியா அணி 408 ரன்களை கடந்த போது, போட்டி சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.

இவரின் உடன்பிறவா சகோதரர் மைக்கேல் கிளார்க்கின் விருப்பத்தை ஏற்று, இவரின் ஒரு நாள் ஜெர்சியின் எண்ணான 64 ஓய்வு பெற்றதாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்தது. அதாவது 64 என்கிற எண்ணை வேறு யாரும் பயன்படுத்த முடியாது. அவரின் நினைவாக 64 எண்ணுக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுவிட்டது.

அடுத்து நடந்த உலகக்கோப்பை இறுதி போட்டியிலும் இவரது கையொப்பமிட்ட கருப்பு பட்டையை அணிந்தே மைக்கேல் கிளார்க் விளையாடினார்.

அடுத்த நிமிடம் நிச்சயம் இல்லாத வாழ்க்கை இது. நம்முடைய ஒரு நொடி அலட்சியத்தால் இழந்து விட வேண்டாம்.