🔥 Burn Fat Fast. Discover How! 💪

பிரிக்ஸ் அமைப்பில் புது நாடுகள்: பொருளாதார உற்பத்தியில் உயர்வு | Er.THANGAMUTHU IPS ACADEMY & STUDY CIRCLE 💯📙📒🖊🖋🖋📝

பிரிக்ஸ் அமைப்பில் புது நாடுகள்: பொருளாதார உற்பத்தியில் உயர்வு

'பிரிக்ஸ்' அமைப்பில் ஆறு புதிய நாடுகள் இணைந்திருப்பது, உலக மக்கள் தொகையில் 46 சதவீதத்தையும், பொருளாதார உற்பத்தியில் 30 சதவீதத்தையும் கட்டுப்படுத்தும் என, ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய நான்கு நாடுகள் இணைந்து உருவாக்கிய பிரிக்ஸ் அமைப்பில், 2010ல் ஐந்தாவது புதிய உறுப்பு நாடாக தென் ஆப்ரிக்கா இணைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்நாட்டின் ஜோஹனஸ்பர்க் நகரில் சமீபத்தில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டின் போது, அர்ஜென்டினா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவுதி - அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய ஆறு நாடுகள் புதிதாக இணைக்கப்பட்டன. வரும் 2024, ஜன., 1 முதல் இந்த புதிய உறுப்பு நாடுகளின் இணைப்பு நடைமுறைக்கு வருகிறது.

இது குறித்து, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் தலைமை பொருளாதார ஆலோசகர் சவுமியா கன்டி கோஷ் வெளியிட்டுள்ள ஆய்வு குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: பிரிக்ஸ் அமைப்பில் தற்போதுள்ள ஐந்து நாடுகள் உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 26 சதவீதத்தை கட்டுப்படுத்துவதுடன், உலக மக்கள் தொகையில் 40 சதவீதத்தை கட்டுப்படுத்தும் குழுவாக உள்ளன.

இப்போது புதிதாக ஆறு நாடுகள் இணைந்து இருப்பதால், உலக மக்கள் தொகையில் 46 சதவீதத்தையும், பொருளாதார உற்பத்தியில் 30 சதவீதத்தையும் கட்டுப்படுத்தும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.