🔥 Burn Fat Fast. Discover How! 💪

கி ல் லா டி க ள்

Logo of telegram channel killadigal — கி ல் லா டி க ள்
Logo of telegram channel killadigal — கி ல் லா டி க ள்
Channel address: @killadigal
Categories: Entertainments
Language: English
Subscribers: 633
Description from channel

Instant View (er)
https://t.me/joinchat/AAAAAEAbd5Vzk0rPTMGF3g
கில்லாடிகள்
https://t.me/joinchat/AAAAAEQcYRvBOjdE4nepKw
Video Forwarder
https://t.me/joinchat/A2Lo4kJW9uiyQk4e8LVTqg
Admin---> @nbalakumar

Ratings & Reviews

2.00

2 reviews

Reviews can be left only by registered users. All reviews are moderated by admins.

5 stars

0

4 stars

0

3 stars

0

2 stars

2

1 stars

0


The latest Messages 3

2021-03-05 04:36:09
156 views , 01:36
Open / Comment
2021-02-22 19:59:03 விமானத்தில் பணிப்பெண்கள் ஒருகையை பின்னே மறைத்திருப்பதற்கு காரணம்

#Airhostess

நீங்கள் விமானத்தின் கேபினுக்குள் செல்லும்போது, விமான பணிப்பெண்கள் உங்களை வரவேற்பார்கள். அப்போது அவர்கள் தங்கள் கையை முதுகுக்கு பின்னால் மடித்து வைத்திருப்பார்கள்.

நீங்கள் விமானங்களில் அடிக்கடி பயணம் செய்யக்கூடியவர் என்றாலும் சரி, அல்லது எப்போதாவது பயணிக்க கூடியவர் என்றாலும் சரி, விமான பணிப்பெண்களின் இந்த செய்கையை நீங்கள் கவனித்திருக்க கூடும்.

அப்படி கவனித்திருந்தால், விமான பணிப்பெண்கள் ஏன் இப்படி செய்கிறார்கள்? என்ற சந்தேகம் உங்களுக்கு எழுந்திருக்கலாம். அந்த சந்தேகத்திற்கான விளக்கத்தை இந்த செய்தியில் வழங்கியுள்ளோம்.

விமான பணிப்பெண்களின் வேலை பல்வேறு பொறுப்புகள் நிரம்பியது, விமானங்கள் நேர்த்தியாக இருப்பதை உறுதி செய்வது, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது என அவர்களுக்கு ஏராளமான பொறுப்புகள் இருக்கின்றன.

ஒரு கையை தங்கள் முதுகுக்கு பின்னால் வைத்திருப்பதும் அவர்களுக்கான பொறுப்புகளில் ஒன்று. ஆனால் அது ஏன்? என்பதுதான் நம்முடைய சந்தேகமே.

எளிமையாக சொல்வதென்றால், அவர்கள் தங்கள் கையில் கவுன்டர் (Counter) ஒன்றை மறைத்து வைத்திருப்பதுதான் இதற்கு காரணம்.

ஸ்கேன் செய்யப்பட்ட டிக்கெட்களின் எண்ணிக்கையுடன், விமானத்தில் ஏறிய பயணிகளின் எண்ணிக்கை ஒத்துபோவதை உறுதி செய்வதற்காக இந்த கவுன்டரை விமான பணிப்பெண்கள் பயன்படுத்துகிறார்கள்.

இதன் மூலம் விமானங்களில், குறிப்பாக பிஸியான விமானங்களில் உள்ள பயணிகளின் தெளிவான எண்ணிக்கை அவர்களுக்கு தெரியவரும்.

ஆனால் எவ்வித தொந்தரவு அல்லது சங்கடமும் இல்லாமல் பயணிகளின் எண்ணிக்கையை உறுதி செய்வதற்காகவே விமான பணிப்பெண்கள் கவுன்டர்களை பயன்படுத்துகிறார்கள்.

ஒவ்வொரு பயணி புதிதாக விமானத்தில் ஏறும்போதும், அவர்கள் இந்த கவுன்டரை ஒரு முறை 'க்ளிக்' செய்து கொள்வார்கள்.

இதன் மூலம் இறுதியில் அவர்களுக்கு குழப்பம் இல்லாத தெளிவான எண்ணிக்கை கிடைக்கும். இந்த கவுன்டர்கள் கைக்கு அடக்கமாக சிறிதாக இருக்கும்.

சில சமயங்களில் பயணிகள் விமானத்தில் ஏறும்போது எண்ணிக்கை கணக்கிடப்படும். அப்போது விமான பணிப்பெண்களின் ஒரு கை பின்னால் மடித்து வைக்கப்பட்டிருப்பதை நீங்கள் காணலாம்.

இன்னும் சில சமயங்களில் பயணிகள் இருக்கைகளில் அமர்ந்த பிறகு எண்ணிக்கை கணக்கிடப்படும்.

அப்போது விமான பணிப்பெண்கள் ஒரு கையை முதுகுக்கு பின்னால் மடித்து வைத்து கொண்டே நடந்து செல்வதை காணலாம்.

இன்னும் சில விமானங்களில் பயணிகள் ஏறும்போதும், இருக்கைகளில் அமர்ந்த பிறகும் என இரண்டு முறை எண்ணிக்கை கணக்கிடப்படும்.

அடுத்த முறை நீங்கள் விமானத்தில் செல்லும்போது முதுகுக்கு பின்னால் மடித்து வைக்கப்பட்டிருக்கும் விமான பணிப்பெண்களின் கைகளை நன்றாக கவனித்து பாருங்கள்.

அவர்கள் சிறிய கவுன்டரை கைகளுக்குள் வைத்து கொண்டு, 'க்ளிக்' செய்து கொண்டே இருப்பதை அப்போது நீங்கள் தெளிவாக பார்க்கலாம்.
366 views , 16:59
Open / Comment
2021-02-22 19:58:40
295 views , 16:58
Open / Comment
2021-02-07 13:56:37 வரலாற்றில் அதிக பயணிகளை ஏற்றிச் சென்ற விமானம்

1991 ஆம் ஆண்டில், கார்கோ 747 என்ற விமானத்தில் ஏற்றி யூத மக்களை எத்தியோப்பியா நாட்டில் இருந்து அனுப்பி வைத்தனர்.

இருக்கை இல்லாத விமானங்களில் ஒரு முறைக்கு 1086 பயணிகள் அனுப்பப்பட்டனர். ஒரு முறை இறங்கும் போது 1088 பேர் இறங்கினர். ஏனெனில் விமானத்திலேயே பிரசவம் நடந்து இரண்டு குழந்தைகள் பிறந்து விட்டன.

ஆப்பரேசன் சாலமன் என்று அழைக்கப்பட்ட இந்த செயல்பாட்டில் 34 இஸ்ரேலி விமானங்கள் பயன்பட்டன. 14,325 எத்தியோப்பிய யூதர்கள் வெறும் 36 மணி நேரத்தில் இஸ்ரேலுக்கு இட மாற்றப்பட்டனர். இந்த செயல்பாடு வரலாற்றில் மிகவும் துணிகரமான செயல்பாடாக இன்றும் கருதப்படுகிறது.
571 viewsN.BalaKumar, 10:56
Open / Comment
2021-01-31 09:01:02 நேட்ரன் ஏரி (#Natron #Lake) பற்றிய தகவல்கள்

கீழே படத்தில் உள்ளது தான் நாட்ரான் ஏரி. செந்நிறத்தில் அழகாகவும் அதே சமயம் பார்க்கவே படு பயங்கரமாக இருக்கும் இந்த ஏரி ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள கென்யாவை எல்லையாக கொண்ட தான்சானியா (#Tanzania) நாட்டின் வடக்கு பகுதியில் உள்ளது......இந்த ஏரியின் பரப்பளவு 1040 ச.கி.மீ ஆகும்.

அதாவது இந்த ஏரியானது 57 கி.மீ நீளமும் (35 மைல்), 22 கி.மீ அகலமும் (14 மைல்) கொண்டது. இதன் ஆழம் 1 அடி முதல் அதிகபட்சம் 9.8 அடி வரை உள்ளது. அதாவது அதிகபட்சம் மூன்று மீட்டருக்கும் குறைவான ஆழத்தையே கொண்டுள்ளது.

இந்த ஏரிக்கு நீரானது அதனை சுற்றியுள்ள மலைகளில் ஏற்படும் நீர் ஊற்றே காரணம். இது ஒரு காரத்தன்மை வாய்ந்த உப்பு ஏரி ஆகும்.

இந்த ஏரியில் உள்ள நீரின் ph மதிப்பு 10.5 லிருந்து 12 வரை இருக்கிறதாம். ph மதிப்பு 12 என்றால் மிக வலிமை மிகு காரம் என்று குறிப்பிடுவர்.. ஆதலால் உலகிலேயே அதிக உப்புத் தன்மை வாய்ந்த ஏரிகளில் இந்த ஏரிதான் முதலிடம்.

இப்பண்பால் இந்த ஏரிக்கு சோடா ஏரி என்ற புனைப்பெயரும் உண்டு... ஆதலால் இந்த உப்பு நீரை எதிர்த்து உயிர்கள் வாழ்வது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.

மேற்குறிப்பிட்ட எரிமலை மற்றும் நீர் ஆவியாாகி பெறப்பட்ட ஏரியில் காணப்படும் உப்புகளைத்தான் நாட்ரான் (Natron) என்று அழைக்கின்றனர். இதன் பொருட்டே இந்த ஏரிக்கு நாட்ரான் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நாட்ரானை பயன்படுத்தி எகிப்தியர்கள் மம்மிக்கள் என்று சொல்லக்கூடிய இறந்த உடல்களை பதப்படுத்தினர்.

இந்த ஏரியில் ஆல்ஹா என்று அழைக்கப்படும் ஒரு வித பாசியும் அதிக அளவு காணப்படுகிறது. அந்த பாசியில் உள்ள நிறமிகள் காரத்தன்மையுள்ள உப்புகளுடன் வினைபுரிந்து இளஞ்சிவப்பு நிறத்தை அளிக்கிறது.

இந்த பாசிகளை தவிர்த்து இந்த உப்பு நீரின் சூழலை ஏற்று வாழக்கூடிய ஒரே ஒரு மீன் இனம் அல்கோலாபியா (#Alcolapia) என்று அழைக்கப்படும் கார டெலபியாஸ் மீன்கள் மட்டுமே.......

விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் அச்சுறுததும் விதத்தில் இருக்கும் இந்த ஏரியை ஒரே ஒரு பறவை மட்டும் தங்களது இருப்பிடமாக தேர்ந்தெடுத்து அங்கு வருடா வருடம் முட்டையிட்டு தன் இனத்தை பெருக்குகிறது. ஆச்சரியமாக இருக்கிறதா....ஆம் அந்த பறவையின் பெயர் ஃபிளமிங்கோ. வருடத்திற்கு 30 இலட்சம் அளவில் இந்த பிளமிங்கோ இங்கு கூடுகிறது. ஆதலால் இப்பறவைகளின் தாயகமாக இந்த நாட்ரான் ஏரி திகழ்கிறது.

இந்த ஏரியை ஒட்டி சலே என்ற பழங்குடி மக்கள் மட்டும் வாழ்கின்றனர்....இவர்கள் இந்த ஏரியை மிகுந்த பயத்துடன் எதிர்நோக்குகின்றனர்..இந்த ஏரியில் ஒரு மிகப்பெரிய சக்தி உள்ளதாக இவர்களால் நம்பப்படுகிறது..ஆதலால் அவர்கள் இந்த ஏரியை கடவுளாக கருதுகின்றனர்.

இந்த ஏரியின் உண்மைத்தன்மையை உலகிற்கு புகைபடம் பிடித்து காட்டியவர் நிக் ப்ராண்ட் என்ற புகழ்பெற்ற புகைப்பட கலைஞர் ஆவார். இவர் 2010 முதல் 2012 வரை இந்த ஏரியை ஆய்வு செய்து பல புகைப்படங்கள் எடுத்து அந்த ஏரியை பற்றிய ஒரு புத்தகமே எழுதி வெளியிட்டார். இதன் காரணமாக 2012 ல் சிறந்த புகைப்பட கலைஞராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
651 viewsN.BalaKumar, 06:01
Open / Comment
2021-01-29 14:09:40 ️மரண தண்டனை அளித்த பிறகு.. நீதிபதி பேனாவை உடைப்பது ஏன்..!!..??


#DeathPenalty

மரண தண்டனை அளித்த பிறகு நீதிபதி பேனாவை உடைப்பது ஏன்
பெரும்பாலும் இந்த நிகழ்வை நேரில் காண யாருக்கும் வாய்ப்பு கிடைத்திருக்காது.

ஆனால், நமது இந்திய சினிமாக்களில் பலமுறை நாம் இதை கண்டுள்ளோம்.

மரண தண்டனை அளித்த பிறகு உடனே நீதிபதி அந்த பேனாவை உடைத்து விடுவார். ஏன்? எதற்காக? எந்த காரணத்திற்காக பேனா நிப்பை உடைக்கிறார்கள் என நாம் முழுமையாக அறிந்ததில்லை.

யாரிடம் இருந்து இம்முறையை இந்தியா பின்பற்றி வருகிறது என்றும் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

அரிது! கடந்த தசாப்தங்களில் நாம் பெரிதாக மரண தண்டனை தீர்ப்புகளை பார்த்ததில்லை.

உலகளவில் மரண தண்டனை தவறு, மனிதத்தன்மை அற்ற செயல் என போர்க்கொடிகள் தூக்கப்பட்டு, மிக அரிதாக தான் மரண தண்டனைகள் வழங்கப்படுகின்றன.

மனிதாபிமான அடிப்படை..!!

மனிதாபிமான அடிப்படை, நல்லொழுக்கம் காரணம் காட்டி சிலரது மரண தண்டனைகள் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட நிகழ்வுகளையும் நாம் கண்டுள்ளோம்.

அஜ்மல் கசாப்..!!

மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்பு இருந்த காரனத்தால் கடந்த மே 3, 2010 அன்று அஜ்மல் கசாபிற்கு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டது. அபோது நீதிபதி எம்.எல். தஹில்யாணி தீர்ப்பு எழுதிய பிறகு பேனாவை உடைத்தார்.

அப்சல் குரு..!!

அப்சல் குருவின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தார். அதனால் சுப்ரீம்கோர்ட் வழங்கிய தீர்ப்பு நீடித்தது. அப்சல் குருவிற்கான தீர்ப்பு உறுதியான போதும் பேனா உடைக்கப்பட்டது.

இது தான் சமீபத்தில் நாம் கண்ட மரண தண்டனை மற்றும் பேனா உடைக்கப்பட நிகழ்வுகள்.

ஏன் பேனாவை உடைக்கிறார்கள்..??

இந்தியா பிரிட்டிஷ்காரர்கள் ஆண்ட நாடு. அவர்கள் கொண்டுவந்த சட்டதிட்டங்கள் பலவன 69 வருடங்கள் கடந்த பிறகும் கூட இன்றளவும் நாம் கடைபிடித்து வருகிறோம்.

ஆங்கிலேயர் ஆட்சி செய்த போது கடைபிடிக்கப்பட்டு வந்த முறை தான் இந்த பேனா நிப் உடைப்பது.

ஒரு நபரின் உயிரை குடித்த நிப்பை வேறு எதற்கும் பயன்படுத்த கூடாது என்பதற்காக இந்த முறை பின்பற்றப்பட்டு வந்துள்ளது. சோகத்தை வெளிப்படுத்த தான் இதை செய்து வந்துள்ளனர்.

குற்ற உணர்வு..?!

சிலர் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் ஒருவரது உயிரை பறித்த குற்ற உணர்வு காரணமாக அந்த பேனாவை அவர்களிடமே வைத்துக் கொள்ள நிப்பை உடைப்பதாகவும் கூறுகின்றனர்.

சட்டப்புத்தகத்தில்..?!

ஆனால், நமது இந்திய சட்டப்புத்தகத்தில் எந்த இடத்திலும் மரண தண்டனை அளித்த பிறகு பேனா நிப்பை உடைக்க வேண்டும் என்ற குறிப்பு இல்லை.
514 views , 11:09
Open / Comment
2021-01-29 14:08:06
335 views , 11:08
Open / Comment
2021-01-28 09:08:35 மேட்டுர் அணை வரலாறு – அறிந்ததும் அறியாததும்..!!


#MetturDam

நமக்கும் நம் தலைமுறைக்கும் சம்பந்தமே இல்லாத மண் இது என்று தெரிந்தும் ஒருவர் தமிழகம் செழிக்கும் வண்ணம் பிரம்மாண்டமான மேட்டூர் அணையை கட்டி கொடுத்துச் சென்றுள்ளார் ராயல் என்ஜீனியர் கர்னல் டபுள்யூ.எம்.எல்லீஸ்.

இன்றைக்கு 48 ஆயிரம் கோடி ரூபாய் கொட்டினால் கூட கட்டமுடியாத பிரம்மாண்டத்தை கொண்டுள்ள இந்த அணையை அன்றைக்கு 4 கோடியே 80 லட்சம் ரூபாய் திட்டத்தில் கட்டி முடித்துள்ளனர்.

மலைக்க வைக்கும் மாபெரும் திட்டம். யாவரும் வியக்கும் மதி நுட்பம்.

மேட்டூர் அணையை இதுவரை இரண்டு முறை மின்னல் தாக்கியது. இருப்பினும் அணைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை தமிழகத்தில் காவிரி கரையோரமாக நிறைய நிலங்களும், விவசாயம் செய்யக் கூடிய ஆட்களும் இருந்தும் போதிய நீர்ப்பாசன வசதி இல்லாததால் விவசாயம் சரிவர செய்ய முடியவில்லை.

இதை உணர்ந்த ஆங்கிலேயே அரசு காவிரியின் குறுக்கே அணை கட்ட முடிவு செய்து இடத்தை தேடியது.

15 ஆண்டுகள் கழித்து அன்றைய ஆங்கிலேய அரசின் சென்னை மாகாண கவர்னர் ஸ்டான்லி காவிரியின் குறுக்கே அணைக் கட்ட உத்தரவிட்டார்.

இந்த உத்திரவை போட்ட கவர்னர் ஸ்டான்லியின் பெயரால் மேட்டூர் அணை இப்போது ஸ்டான்லி நீர் தேக்கம் என்றும் அழைக்கப்படுகிது.

இந்த அணையில் கடல் போல காட்சியளிக்கும் அளவுக்கு தண்ணீர் தேக்கப்பட்டது.

அணையை கட்டிய பொறியாளர் டபிள்யூ.எம்.எல்லீஸ் ராயலை மேட்டூர் அணையின் சிற்பி அன்றும், இன்றும் புகழப்படுகிறார் இனி என்றும் புகழப்படுவார்.

இந்திய அளவிலான பெரிய அணைகளில் ஒன்றான இதன் உச்ச நீர் மட்ட அளவாக 120 அடி வரை நீரைத் தேக்கலாம்.

அதன் பிறகு ஓடிவரும் நீர் வரத்து யாவும் உபரியாக அணைக்கட்டில் நிற்காமல் நிரம்பாமல் தானாகவே வெளியேறிச் செல்லும் அற்புதமான இயற்கையுடன் இணைந்த கட்டுமானப்பணி, எந்தக் காலத்திலும் அணைக்கோ அணை சார்ந்த கட்டுமான அமைப்புகளுக்கோ ஒருக்காலும் ஊறு விளைக்கமுடியாத தன்மைகளுடன் அமைக்கப்பட்டிருக்கிறது.

மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்ட நாள்: 21.8.1934

அணைக் கட்ட ஆன செசலவு 4.80 கோடி

அணையின் நீளம் 5.300 அடி

அணையின் கொள்ளளவு 93.50 டி.எம்.சி.

அணையின் உயரம் 214 அடி

அணையின் அகலம் 171 அடி

அணையின் சேமிப்பு உயரம் 120 அடி

அணையின் நீர்பிடிப்பு பரப்பளவு 59.25 சசதுர மைல்

2,71,000 ஏக்கர் பாசன வசதி அடைகிறது.

அணையின் மூலம் தினமும் 240 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டனம் என மொத்தம் 11 காவிரிப் பாசனப் பகுதி மாவட்டங்களுக்கு மேட்டூர் தண்ணீர் போகிறது.

மொத்தம் 16 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

அது மட்டுமல்லாமல், மேட்டூர் அணையை நம்பி 4000 மீனவர்கள் குடும்பங்களும் உள்ளன.

மேட்டூர் அணையிலிருந்து வெளியே வரும் காவேரி அதே பெயரில் 106, கிலோ மீட்டர் தூரம் செல்கிறது.

இதன் கிளை நதிகளாக கொள்ளிடம், பொன்னியாறு, கல்லணை கால்வாய், வெட்டாறு, வெண்ணாறு, குடமுருட்டி என்ற பெயரில் பல நதிகளாக 694 கிலோ மீட்டர் தூரம் செல்கிறது.

இதை தாண்டி, 1904 கிலோ மீட்டர்தூரத்துக்கு வாய்கால் மூலம் பாசன வசதியை கொடுக்கிறது.

இப்படி தமிழகத்தை நெற்களஞ்சியமாக்கும் வகையிலும்,பல்வேறு மாவட்ட மக்களின் தாகம் தீர்க்கும் வகையிலும் ,கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் தன் மண், மக்கள், உறவு மறந்தும், உணவும் தூக்கமும் துறந்தும் மேட்டூர் அணை என்ற பிரம்மாண்டத்தை வடிவமைத்து கட்டிக்கொடுத்த கர்னல் டபுள்யூ.எம்.எல்லீசை, அணையும் நம் மனசும் நிறைந்துள்ள இந்த நேரத்தில் நினைவு கூர்வோம்.
417 views , 06:08
Open / Comment
2021-01-28 09:08:15
296 views , 06:08
Open / Comment
2021-01-26 11:07:17 ️விமான கருப்பு பெட்டி


#BlackBox

ஒரு விமான விபத்து ஏற்பட்டால் உடனே கருப்பு பெட்டியை தேடும் பணி தீவிரம் என்று செய்திகளில் பார்த்திருக்க முடியும்.

இது அனைத்து விமானங்களிலும், பொருந்தும். ஏனெனில், உலகில் உள்ள அனைத்து விமானத்திலும் இந்த கருப்பு பெட்டி நிச்சயம் இடம்பெற்றிருக்கும்.

கருப்பு பெட்டி என்றால் என்ன?


கருப்பு பெட்டி என்று பெயர் பெற்ற இந்த பொருள் உண்மையில் ஆரஞ்சு நிறத்தில் தான் இருக்கும்.

அதற்கு காரணம், விமானம் விபத்திற்குள்ளாகும் போது, பெரும்பாலும் தீ பற்றி எரிகிறது.

அதில், முழுவதும் கருப்பாகவே காணப்படும். இந்த சூழலில், இந்த பெட்டியும் கருப்பாக இருந்தால் தேடுவது சிரமமாக இருக்கும் என்று இது ஆரஞ்சு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளது.

மேலும்,இந்த கருப்பு பெட்டி 1950 க்கு முன் விமானங்களில் கிடையாது. விமானங்கள் விபத்தை சந்திக்கையில், அதன் காரணம் பற்றி அறிந்துக் கொள்ள முடியாததால் இந்த கருப்பு பெட்டி உருவாக்கப்பட்டது.

முதலில், ரெக்கார்ட் செய்வது ஒரு உலோக துண்டாக மட்டுமே இருந்தது. அதனை தொடர்ந்து தற்போது அதில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு மெமரி சிப்புகள் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

பெரும்பாலான விமானங்களில் இரண்டு கருப்பு பெட்டிகள் பொருத்தப்பட வேண்டும். ஒன்று காக்பிட் குரல் ரெக்கார்டர் மற்றொன்று விமான தரவு ரெக்கார்டர்.

அவை ஒரு விமானத்தை பற்றிய தகவல்களைப் பதிவு செய்கிறது. அது மட்டுமின்றி இந்த தகவல்களை கொண்டு மற்ற விமானங்களில் அதை சரி செய்யவும் முடியும்.

இதில், விமானிகளின் உரை, விமானத்தின் உயரம், உள்ளிட்ட பல தகவல்களை இந்த கருப்பு பெட்டியால் சேமிக்க முடியும். அதாவது கிட்டத்தட்ட 80 க்கும் மேற்பட்ட தகவல்களை இந்த கருப்பு பெட்டி சேமிக்கிறது.

இதனால், இந்த கருப்பு பெட்டி ஸ்டீல் அல்லது டைட்டானியத்தால் உருவாக்கப்படுகிறது. எந்த காலநிலையிலும் செயல்பட முடியும்.

அதேபோல் கருப்பு பெட்டி விமானத்தின் வால்பகுதியில் தான் அமைக்கப்பட்டிருக்கும். ஏனெனில், வால்பகுதி எப்போதும் விபத்தினால் அதிகம் பாதிக்கப்படுவதில்லை.

விமானம் தண்ணீருக்கடியில் விழுந்தால், அதன் கருப்பு பெட்டியை கண்டுபிடிக்க, அதில் அல்டரா சவுண்ட் சிக்னல் பொருத்தப்பட்டிருக்கும். இந்த சிக்னலை 30 நாட்கள் வரை தேடுவார்கள்.

கருப்பு பெட்டி உடனே கண்டுபிடிக்கப்பட்டாலும், அதன் தரவுகள் கிடைக்க 10 முதல் 15 நாட்கள் வரை ஆகலாம்.

விபத்திற்கு முன்னதாக விமானிகளுக்கு இடையிலான உரையாடல் பதிவுகள், தடயங்கள் போன்றவற்றை தெரிந்துக் கொள்ள வேண்டும்.

விமானம் விபத்திற்குள்ளாக வாய்ப்புள்ளது என்பதை விமானிகள் எப்படி புரிந்துக் கொள்கின்றனர். அவர்கள், அதற்கு என்னென்ன நடைமுறைகள் பற்றி பேசுகின்றனர் என்பதை பற்றி அந்த கருப்பு பெட்டியில் இருந்து கண்டறியப்பட வேண்டும்.

மேலும், விமான நிலையத்தில் உள்ள தகவல்கள், மற்றும் விமானம் தரையில் தொட்ட வேகம், ஓடுபாதையில் செல்லும்போது உள்ள வேகம் பற்றி இதில் கண்டிறியப்படுகிறது.

ஒவ்வொரு விமான விபத்தும், முறையாக விசாரிக்க காரணம் அடுத்த விமான விபத்து நடக்க கூடாது என்பதை அடிப்படையாக கொண்டே நடத்தப்படுகிறது.
403 views , 08:07
Open / Comment