🔥 Burn Fat Fast. Discover How! 💪

கி ல் லா டி க ள்

Logo of telegram channel killadigal — கி ல் லா டி க ள்
Logo of telegram channel killadigal — கி ல் லா டி க ள்
Channel address: @killadigal
Categories: Entertainments
Language: English
Subscribers: 633
Description from channel

Instant View (er)
https://t.me/joinchat/AAAAAEAbd5Vzk0rPTMGF3g
கில்லாடிகள்
https://t.me/joinchat/AAAAAEQcYRvBOjdE4nepKw
Video Forwarder
https://t.me/joinchat/A2Lo4kJW9uiyQk4e8LVTqg
Admin---> @nbalakumar

Ratings & Reviews

2.00

2 reviews

Reviews can be left only by registered users. All reviews are moderated by admins.

5 stars

0

4 stars

0

3 stars

0

2 stars

2

1 stars

0


The latest Messages 4

2021-01-26 10:04:48
323 views , 07:04
Open / Comment
2021-01-22 06:45:12 ஆசியாவில் இரண்டாவது பெரிய தொலைநோக்கி

வைணு பாப்பு வானாய்வகம் (Vainu Bappu Observatory) தமிழ்நாட்டின் திருப்பத்தூர் மாவட்டத்தில் காவலூரில் இருக்கிறது. இது ஜவ்வாது மாலையில் அமைந்துள்ளது.

இது, இந்திய வானியற்பியல் நிலையத்தின் முதன்மை வானாய்வகம் ஆகும்.

இந்தியாவின் மிகப்பெரிய வானியல் ஆய்வுத் தொலைநோக்கி.

இங்கு இந்திய வான் இயற்பியல் ஆய்வகத்தால் (Indian Institute of Astrophysics) நிறுவப்பட்டுள்ளது.

இது அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தியால் திறந்துவைக்கபட்டது.

இந்திய இயற்பியலாளர், இந்திய வானியல் முன்னோடியான வைணு பாப்பு அவர்களின் வானியல் பங்களிப்புக்காக இப்பெயர் சூட்டப்பட்டது.

இங்குள்ள 2.34 மீட்டர் விட்டமுடைய தொலைநோக்கி ஆசியாவிலேயே மிகப்பெரியதாகும்.

இது 1986-ஆம் ஆண்டு செயல்பாட்டுக்கு விடப்பட்டது.
500 viewsN.BalaKumar, 03:45
Open / Comment
2021-01-12 08:53:05 நம் முப்படைகள் ஏன் வெவ்வேறு மாதிரி சல்யூட் / வீரவணக்கம் (salute) செலுத்துகிறது என்று உங்களுக்குத் தெரியுமா ???

நம் முப்படைகளான இந்திய இராணுவம், இந்திய விமானப்படை மற்றும் இந்திய கப்பற்ப்படை ஆகியவற்றின் உடைகள் வெவ்வேறு நிறங்களில் இருக்கும். அவர்களின் போர் முறையும் ஒன்றுகொன்று வித்தியாசமானது. அவர்களின் பதவிகளின் தரமும் (Rank) வெவ்வேறாக இருக்கும். அது மட்டும்மில்லாமல் அவர்கள் வீரவணக்கம் செலுத்தும் முறையும் வெவ்வேறாக இருக்க காரணம் என என்பதை பார்க்கலாம்.

சல்யூட் அடிப்பது என்பது மரியாதை செலுத்துவதாகும், இந்த சல்யூட் ஒரு தனிமனிதனுக்காக அளிக்கப்படவில்லை, அந்த நபரின் சாதனைகளுக்காகவும், அவர் அணிந்திருக்கும் உடையின் மதிப்பிற்கும்,அவருடைய பதவியின் பெருமைக்காகவும் அளிக்ககூடிய ஒரு சிறப்பான அங்கீகாரம் ஆகும். இந்தியாவின் ஒவ்வொரு படையிலும் எவ்வாறு வீரவணக்கம் செலுத்த வேண்டும் என்ற விதிமுறையையும் வரலாற்றையும் காண்போம்.

இந்திய இராணுவம்
உள்ளங்கை திறந்த நிலையில் முனோக்கி இருக்க வேண்டும்

எப்படி:
அனைத்து விரல்களும் ஒன்றுடன் ஒன்று கட்டைவிரலுடன் இணைந்திருக்க வேண்டும், நடுவிரல் கண் புருவத்தை தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும்.

காரணம்:
போர் சமயத்திலும் இயற்க்கை பேரிடர்களின் போதும் தங்கள் இன்னுயிரையும் கொடுக்கும் உன்னத வீரர்களை கொவ்ரவப்படுத்தவும் அதுமட்டுமின்றி சல்யூட் அடிக்கும் போது தான் எந்தவிதமான தீய எண்ணத்துடனும் இல்லை மற்றும் நான் என் கையில் எந்த வித ஆயுதங்களையும் மறைத்து வைத்திருக்கவில்லை என்பதை வெளிப்படுத்தவும் இந்திய இராணுவத்தில் இவ்வாறு சல்யூட் அடிக்கப்படுகிறது.

இந்திய கடற்படை:
உள்ளங்கை திறந்த நிலையில் கீழ்நோக்கி இருக்க வேண்டும்.

எப்படி:
கையை திருப்பிய நிலையில் உள்ளங்கை தோள்பட்டையை நோக்கி இருக்குமாறு தலைக்கு 90 டிகிரி கோணத்தில் செங்குத்தாக இருக்க வேண்டும்.

காரணம்:
அந்த காலத்தில் கப்பலில் வேலை செய்யும் பணியாளரின் கைகளில் கிரீஸ், எண்ணெய்க்கறை போன்றவை படிந்திருக்கும்.அந்த கறையோடு தன் உயரதிகாரிக்கு சல்யூட் அடித்தால் அது அவரை அவமதிப்பதாகும்.எனவே தான் சல்யூட் அடிக்கும்போது இந்திய கடற்ப்படை வீரர் தன் உள்ளங்கையை கீழ்நோக்கி வைத்துள்ளார்.

இந்திய விமானப்படை:
உள்ளங்கை திறந்த நிலையில் 45 டிகிரி கோணத்தில் சாய்வாக தரையை நோக்கி இருக்க வேண்டும்.

எப்படி:
கைகளை திறந்த நிலையில் ஒன்றோடு ஒன்று இணைத்து 45 டிகிரி கோணத்தில் தரையை நோக்கி இருக்க வேண்டும்.இந்திய விமானப்படை சல்யூட் மற்றும் இந்திய கப்பற்ப்படையின் சல்யூட்டிற்கு இடையில் இருக்க வேண்டும்.

காரணம்:
பண்டையகாலத்தில் இந்திய விமானப்படை நம் இராணுவத்தின் சல்யூட் அடிக்கும் முறையையே பயன்படுத்தி வந்தது. ஆனால் விமானப்படை தனக்கென்று ஒரு அடையாளம் வேண்டும் என்று மார்ச் 2006 இந்த புதிய முறையை பின்பற்ற தொடங்கியது.

ஜெய்ஹிந்த்
697 viewsN.BalaKumar, 05:53
Open / Comment
2021-01-12 08:52:52
490 viewsN.BalaKumar, 05:52
Open / Comment
2021-01-10 13:56:40 உலகின் மிக நீளமான நேர்கோடு சாலை

உலகின் மிக நீளமான சாலை சவுதி அரேபியாவில் உள்ள நெடுஞ்சாலை எண் 10.

ஹராத் முதல் அல் பாதா வரை நீண்டு செல்லும் இந்த நெடுஞ்சாலை சுமார் 256 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது மற்றும் ரப் அல்-காளி பாலைவனம் வழியாக செல்கிறது

இது உலகின் மிக நீளமான நேர்-கோடு சாலையாகும், இதன் நீளம் 250 முதல் 256 கி.மீ. கூகிள் மேப்ஸின் கூற்றுப்படி, இந்த நேர் ரோடு கடக்க இரண்டு மணி நேரம் தேவைப்படுகிறது.

இதில் நிலம் மற்றும் பெரும்பாலான பாலைவனமாக இருப்பதால், வாகனம் ஒட்டுபவர்களுக்கு சலிப்பாக அமையும். மணல் திட்டுகளை ரசித்து கொண்டே இருப்பவர்களுக்கு ஆனந்தமாக இருக்கும்.

ஆனால் ஒரு வளைவு இல்லாமல் 2 மணிநேர வாகனத்தை ஒட்டி, ஒரு புதிய அனுபவத்தை பெறலாம்.

அதிலும், ஒரு நாளில் 50'C வெப்ப நிலையும், இரவில் உறைபனியும் கொண்ட இடமாகும்.

ஆஸ்திரேலியாவின் நெடுஞ்சாலை முந்தைய சாதனையை சுமார் 146 கிலோமீட்டர் நேரான சாலையாக இருந்தது.
582 viewsN.BalaKumar, 10:56
Open / Comment
2021-01-05 16:01:28 உலகில் தேசிய கீதத்தை மாற்றிய நாடுகள்

#NationalAnthem

இந்த பதிவில் உலகில் தங்கள் தேசிய கீதங்களை மாற்றிய நாடுகளை பற்றி காணலாம் வாருங்கள்.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அந்நாட்டு தேசிய கீதத்தை மாற்ற வேண்டும் என்ற பேச்சு பல ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வருகிறது.

அந்நாட்டு மக்கள் ஜனவரி 26ம் தேதியை தங்கள் தேசிய தினமாக கொண்டாடுகின்றனர்.

அன்று தான் பிரிட்டிஷ்காரரர்கள் அந்நாட்டிற்குள் நுழைந்ததாக அந்நாட்டு மக்கள் கருதுகின்றனர்.

இந்நிலையில் தற்போது அந்நாட்டு அரசு அந்நாட்டு தேசிய கீதத்தில் சில மாற்றங்களை கொண்டு வர முடிவு செய்துள்ளது.

தென் ஆப்பிரிக்கா

1997ம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா நாட்டின் தேசிய கீதம் மாற்றப்பட்டது.

முன்னதாக அந்நாட்டின் தேசிய கீதம் அந்நாட்டு மொழியான அப்பர்தைடு என்ற மொழியில் அதற்கான விதிமுறைகளுடன் இருந்தது.

புதிதாக மாற்றப்பட்ட தேசிய கீதம் அந்நாட்டின் 5 விதமான மொழிகளிலும் இசையமைக்கப்பட்டுள்ளது.

கனடா

கனடா நாட்டில் கடந்த 2018ம் ஆண்டு தேசிய கீதம் மாற்றப்பட்டது. முன்னதாக இருந்த தேசிய கீதத்தில் சில வரிகள் பாலின பாகுபாடு குறித்து இருந்தன.

இந்த வரிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதற்காக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பல்வேறு தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டு இந்த மாற்றம் நிறைவேற்றப்பட்டது.

நேபாளம்

கடந்த 2006ம் ஆண்டு வரை நேபாள நாட்டில் மன்னராட்சி முறை நடை முறையிலிருந்தது. அதன் பின்தான் ஜனநாயக ஆட்சி முறை அந்நாட்டிற்கு வந்தது.

இதையடுத்து கடந்த 2007ம் ஆண்டு தான் அந்நாட்டிற்கு ஜனநாயக ஆட்சி முறைக்கான முதல் தேசிய கீதம் இயற்றப்பெற்றது.

அதன் பின் தான் நேபாளம் ஒரு தேசமாகவே உலகத்தால் அங்கீகரிக்கப்பட்டது.

ரஷ்யா

ரஷ்யா, சோவியத் யூனியனாக இருந்த போது அந்நாட்டின் தேசிய கீதம் ஜோசப் ஸ்டாலினை போற்றுவதாகவே இருந்தது.

பின்னர் சோவித் யூனியன் முடிவுக்கு வந்து ரஷ்யா தனி நாடாக மாறிய போது அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் கடந்த 2000வது ஆண்டு புதிய தேசிய கீதத்தை உருவாக்கினார்.

முன்னதாக 1877ம் ஆண்டு உருவாக்கப்பட்ட சோவியத் யூனியன் தேசிய கீதம் 1956ம் ஆண்டு மாற்றியமைக்கப்பட்டு பழைய தேசிய கீதத்தில் இருந்த ஸ்டாலின் என்ற வார்த்தை மட்டும் அகற்றப்பட்டது.

ஈராக்

கடந்த 2003ம் ஆண்டு வரை ஈராக்கின் சர்வாதிகாரியாக சதாம் உசேன் விளங்கினார்.

அவரது ஆட்சி முடிவுக்கு வந்தவுடன் அவரதுஆட்சியிலிருந்த தேசிய கீதத்தை மாற்ற மடிவு செய்தன.

ஆனால் விரைவாக அவர்களால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. இந்நிலையில் 2004ம் ஆண்டு மோதினி என்ற பாடலை தேசிய கீதமாக அந்நாடு அறிவித்தது.

இருந்தாலும் அதில் பல சர்ச்சைகள் எழுந்த வந்த நிலையில் கடந்த 2020 மே மாதம் மோதினி இசையை தங்கள் தேசிய கீதமாக அறிவித்ததை அந்நாட்டு அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

தற்போத அந்நாட்டிற்கு அதிகாரப்பூர்வமான தேசிய கீதம் எதுவும் இல்லை.
620 views , 13:01
Open / Comment
2021-01-05 16:00:57
445 views , 13:00
Open / Comment
2021-01-01 05:51:17 அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள்.

அன்புடன்
N.பாலகுமார்
2.4K viewsN.BalaKumar, 02:51
Open / Comment
2020-12-29 15:17:23 அதென்ன Boxing Day ?

இங்கிலாந்தை 1800களில் ஆண்ட விக்டோரியா மகாராணி காலத்தில்தான், இந்த Boxing Day அறிமுகமாயிற்று..

தனது பணியாட்களுக்கு லீவு கொடுத்து, ஒரு கிறிஸ்மஸ் பெட்டியும் அன்பளிப்பாக வழங்குவது, இராணியாரின் அன்றைய பாரம்பரிய வழக்கமாக இருந்துள்ளது. கிறிஸ்மஸ் தினத்தில் கிடைக்கும் பரிசுப் பெட்டிகளை அடுத்த நாள் (டிசம்பர் 26அன்று) (தமது லீவு நாளில்), வீட்டுக்கு எடுத்துச் செல்பவர்கள், குடும்பத்தோடு சேர்ந்து பெட்டியைத் திறந்து பார்ப்பது வழமையில் இருந்தது. பெட்டியைத் திறப்பதுதான் Boxing என்றாகின்றது.

இன்றைய நாட்களில் இதுவும் கிறிஸ்மஸ் தினத்துடன் இணைந்த ஒரு பொதுவிடுமுறை தினமாகி விட்டது. கிறிஸ்மஸ் தினமன்று ஜோடனை மரத்தடியில் சேகரிக்கப்படும் தமது பரிசுப் பெட்டிகளை, 26இல் ஆறுதலாக பிள்ளைகள் திறந்து பார்ப்பது, ஐரோப்பிய மண்ணில் இன்னமும் வழமையில் இருக்கின்றது.

ஏழைகளுக்கு பணஉதவி, கத்தோலிக்க ஆலயங்களிலும் நீண்ட காலம் பின்பற்றப்பட்ட ஒரு வழமையையும் சொல்ல வேண்டும்.

கோவிலுக்கு வருபவர்கள், கடவுளுக்கு காணிக்கை என்று வாராவாரம் கொடுக்கும் சிறு தொகை வருடம் முழுவதும் சேகரிக்கப்பட்டு, ஒரு பெட்டியில் பாதுகாப்பாக வைக்கப்படுவதுண்டு. கிறிஸ்மஸ் கழிந்த அடுத்த தினம் , இந்தப் பெட்டி திறக்கப்பட்டு, சேகரித்த பணம் ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும்.

இன்னொன்றையும் சொல்லியாக வேண்டும். பிரிட்டனில் முன்பெல்லாம் கிறிஸ்மஸ் தினமன்று பெரிய பெரிய கால் பந்தாட்டப் போட்டிகளை ஏற்பாடு செய்வார்கள். மதிய உணவு முடிந்ததும், ஆட்டங்களை பார்த்து ரசிக்க, அழகாக உடுத்திக் கொண்டு எல்லாரும் மைதானத்திற்கு வந்து திரள்வார்கள்..

ஆனால் 50 களில் இதில் மாற்றம் வர ஆரம்பித்ததோடு, 1957இல் இந்த பழக்கம் ஒரேயடியாக நிறுத்தப்பட்டு விட்டது. இன்றைய நாட்களில் கிறிஸ்மஸ் தினமன்று எந்த விளையாட்டும் இடம்பெறுவதில்லை.

ஆனால் இந்த டிசம்பர் 26 அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டு விட்டது.

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு, இன்றைய தினத்தில் (26/12/2020) இந்தியா-ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டி துவங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
641 viewsN.BalaKumar, 12:17
Open / Comment