Get Mystery Box with random crypto!

#MadrasDay - August 22 1639 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22-ஆம் நாள் கிழ | Er.THANGAMUTHU IPS ACADEMY & STUDY CIRCLE 💯📙📒🖊🖋🖋📝

#MadrasDay - August 22

1639 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22-ஆம் நாள் கிழக்கிந்திய கம்பெனியின் சார்பாக பிரான்சிஸ் டே மற்றும் ஹென்றி ஹோகன் இருவரும் இணைந்து மதராஸ் பகுதியை வெங்கட்ட நாயக்கரிடம் இருந்து வாங்கிய நாளை தான் "மெட்ராஸ் தினமாகக்" கொண்டாடுகிறோம்.

1996ம் ஆண்டு தமிழக அரசு மெட்ராஸ் என்ற பெயரை சென்னை என பெயர் மாற்றம் செய்தது.

நமது சென்னை பற்றிய சிறப்பு தகவல்கள்:

தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை, இந்தியாவின் நான்காவது பெரிய நகரம் ஆகும்.

இந்தியாவில் உருவான முதல் நகராட்சி மதராஸ் (சென்னை).

சென்னை, "தென்னிந்தியாவின் நுழைவாயில்" ஆகும்.

சென்னை, கோலிவுட் (Kollywood) என அறியப்படும் தமிழ்த் திரைப்படத் துறையின் தாயகம் ஆகும்.

சென்னை, "இந்தியாவின் டெட்ராய்ட் "என அழைக்கப்படுகிறது.

சென்னையில் உள்ள "கோயம்பேடு பேருந்து நிலையம்" ஆசியாவின் மிகப் பெரியதாகும்.

"சென்னை டைடல் பார்க்" ஆசியாவிலேயே மிகப்பெரிய ஐடி பூங்காவாகும்.

ஆசியாவின் 2வது மிகப்பெரிய நூலகம், சென்னையிலுள்ள உள்ள "அண்ணா நூற்றாண்டு நூலகம்" ஆகும்.

இந்தியாவின் மிகப் பழமையானது, "சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியம்" ஆகும்.

2004ஆம் முதல் சென்னையின் பிறந்த நாளான இன்று, சென்னை தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

Follow Us On :-
Er. Thangamuthu Study Circle
Telegram : https://t.me/Thangamuthustudycircle