Get Mystery Box with random crypto!

#தேசியவிளையாட்டுதினம் - ஆகஸ்ட் 29 பிரபல முன்னாள் ஹாக்கி விளை | Er.THANGAMUTHU IPS ACADEMY & STUDY CIRCLE 💯📙📒🖊🖋🖋📝

#தேசியவிளையாட்டுதினம் - ஆகஸ்ட் 29
பிரபல முன்னாள் ஹாக்கி விளையாட்டு வீரர் 'மேஜர் தயான் சந்த்' பிறந்த நாளான ஆகஸ்ட்-29 அன்று இந்தியாவில் "தேசிய விளையாட்டு தினம்" கொண்டாடப்படுகிறது.

"ஹாக்கி விளையாட்டின் மந்திரவாதி" - தயான்சந்த்:

தயான்சந்த் கோல் அடிப்பதில் அசாதாரண திறமையைக் கொண்டிருந்தார். அவர் உதவியால், இந்தியா 1928, 1932 மற்றும் 1936 ஒலிம்பிக் போட்டிகளில் ஹாக்கியில் தங்கப் பதக்கங்களை வென்றது.

இவரது சகாப்தம் இந்திய ஹாக்கியின் "பொற்காலம்" என்று அழைக்கப்படுகிறது.

விளையாட்டின் மீதான சிறந்த கட்டுப்பாட்டின் காரணமாக அவர் "ஹாக்கி வழிகாட்டி" (Hockey Wizard) என்று அழைக்கப்படுகிறார்.

அவர் தனது சர்வதேச விளையாட்டில் 400 க்கும் மேற்பட்ட கோல்களை அடித்துள்ளார்.

1956 ஆம் ஆண்டில் இந்திய அரசு அவருக்கு அரசின் 3வது உயரிய விருதான பத்ம பூஷண் விருதை வழங்கியது.

தயான்சந்தின் சுயசரிதை ( autobiography) "கோல்"(Goal) என்ற தலைப்பில் 1952 இல் வெளியானது.

இவரின் அசாதாரணமான திறமையால், இவர் "ஹாக்கி விளையாட்டின் மந்திரவாதி"(Hockey Magician) என்று அழைக்கப்படுகிறார்.

இந்தியாவில் விளையாட்டு துறைக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல்ரத்னா விருது, 2021 ஆம் ஆண்டு முதல் "மேஜர் தயான்சந்த் கேல்ரத்னா விருது" என இவரது பெயரில் வழங்கப்பட்டு வருகிறது.

Follow Us On :-
Er. Thangamuthu Study Circle
Telegram : https://t.me/Thangamuthustudycircle