🔥 Burn Fat Fast. Discover How! 💪

# மாமன்னர்பூலித்தேவன் பிறந்த தினம் - செப்டம்பர் 1. பூலித் | Er.THANGAMUTHU IPS ACADEMY & STUDY CIRCLE 💯📙📒🖊🖋🖋📝

# மாமன்னர்பூலித்தேவன் பிறந்த தினம் - செப்டம்பர் 1.

பூலித்தேவன் (1715 -1767) நெற்கட்டான் செவ்வலைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்டு வந்த பாளையக்காரராவார்.

சித்தாபுத்திரத் தேவருக்கும், சிவஞான நாச்சியாருக்கும் மகனாக 1715-ஆம் ஆண்டு பிறந்த பூலித்தேவருக்கு 1726 ஆம் ஆண்டு பட்டம் சூட்டப்பட்டது.

மொகலாயப் பேரரசின் கடைசி பேரரசரான ஔரங்கசீப் மறைந்த 1707ஆம் ஆண்டுக்கு பிறகு வேகமாக தலையெடுக்க தொடங்கிய ஆங்கிலேய ஆட்சியை முதன் முதலில் எதிர்த்து போரிட்டவர் நமது பூலித்தேவரே.

இந்திய நாட்டின் விடுதலை வரலாற்றில் `வெள்ளையனே வெளியேறு’ என்று முதல்முதலாக 1755 ஆம் ஆண்டிலேயே வீர முழக்கம் செய்தவர்.

ஆங்கிலேயருக்கு எதிராக முதல் குரல் தென்னகத்து நெல்லைச் சீமையில் இருந்து இவர் மூலமே எழுந்தது! அந்த வகையில் முதல் இந்திய விடுதலைப்போர் எனப்படும் 1857 போருக்கும் முன்னோடி இவரே.

1755 முதல் 1767 வரை 12 ஆண்டுகள் வெள்ளையரை எதிர்த்து 17 முறை போரில் நின்ற பூலித்தேவன். இதில் 15 போர்களில் வெள்ளையரின் படையை ஓடஒட விரட்டி அடித்தார்.

1755ஆம் ஆண்டு கர்னல் கீரோன் (கர்னல் அலெக்ஸாண்டர் ஹெரான்) தம் கோட்டையை முற்றுகையிட்டு கப்பம் கட்ட நிர்ப்பந்தம் செய்தபோது தன்னுடைய நிலப்பகுதியில் வசூலிக்கும் உரிமை வெள்ளையர் எவருக்கும் கிடையாது என வீர முழக்கமிட்டு வெள்ளையனை விரட்டியடித்து முதல் வெற்றி பெற்றார்.

ஒரு நெல் மணிகூட வரியாகக் கட்ட முடியாது என்று சொன்னதால் அந்தப் பகுதிக்கே "நெல்கட்டான்செவ்வல்" என்ற பெயர் ஏற்பட்டதாம்!

இறுதியாக இவர் 1767ஆம் ஆண்டு இறந்து விட்டதாக சொல்லப்பட்டாலும், அது இன்று வரை அவிழ்க்கப்படாத முடிச்சாகவே உள்ளது.

அவரின் நினைவாக அவர் வாழ்ந்த இல்லம் தமிழக அரசால் புதுப்பிக்கப்பட்டு அவரது நினைவு மாளிகையாக அமைக்கப்பட்டுள்ளது.

Follow Us On :-
Er. Thangamuthu Study Circle
Telegram : https://t.me/Thangamuthustudycircle