🔥 Burn Fat Fast. Discover How! 💪

# உலக தேங்காய் தினம் - செப்டம்பர் 2 . செப்டம்பர் 2 ஆம் நா | Er.THANGAMUTHU IPS ACADEMY & STUDY CIRCLE 💯📙📒🖊🖋🖋📝

# உலக தேங்காய் தினம் - செப்டம்பர் 2 .

செப்டம்பர் 2 ஆம் நாள் "உலக தேங்காய் தினம்" கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் இந்த நிகழ்வு தென்னை வளர்ச்சி வாரியத்தால் (Coconut Development Board) ஏற்பாடு செய்யப்பட்டது.

THEME: 2021-"கோவிட் -19 காலத்திலும் அதற்கு பிறகும் ஒரு பாதுகாப்பான மற்றும் நிலையான தேங்காய் சார்ந்த சமூகத்தை உருவாக்குதல்".

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஆசிய மற்றும் பசிபிக் தென்னை வளர்ப்பு குழு (Asian and Pacific Coconut Community - APCC) நிறுவப்பட்ட தினமான செப்டம்பர் 2-ம் தேதி (1969-ம் ஆண்டு) "உலக தேங்காய் தினமாக" கடைபிடிக்கப்படுகிறது.

2009 ஆம் ஆண்டு முதல் "உலக தேங்காய் தினம்" கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் தென்னை வளர்ப்பு ஊக்குவிப்பதற்கும் ஒருங்கிணைப்பதற்கும் இந்த அமைப்பு நிறுவப்பட்டது.

வறுமைக் குறைப்பில் உயிர்நாடியாக விளங்குகின்ற தெங்குப் பயிரின் முக்கியத்துவம் தொடர்பாக மக்களிடையே அதிக விழிப்புணர்வினை ஏற்படுத்துவதே இந்நாளின் நோக்கமாகும்.

இந்த அமைப்பின் உறுப்பினர்கள் எண்ணிக்கை :18.

இந்தியா, இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகள் உலகில் அதிகமாக தேங்காய் உற்பத்தி செய்யும் நாடுகளாகும்.

சிறப்புகள்:
அறிவியல் பெயர் - கோகோ நியூசிஃபெரா (Cocoa Nucifera).

தென்னையை ‘பூலோகக் கற்பகவிருட்சம்’ என்பார்கள்.

உலகின் 49வது மதிப்புமிக்க பணப்பயிராக இருப்பது தேங்காய்.

கேரளா மாநிலத்தின் தேசிய மரம் - தென்னை மரம்.

பெயரிட்டவர் - வாஸ்கோடகாமா.
Coco - மூடிய பொருள்.
Nut - பருப்பு (அ) விதை

Telegram : https://t.me/Thangamuthustudycircle

மருத்துவ பயன்கள்:
நமது உயிரணுக்களைப் பாதுகாக்கும் முக்கியமான ஆக்ஸிஜனேற்ற செலினியம் தேங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும்.

தேங்காய் சதையில் பினோலிக் கலவைகள் உள்ளன. அவை ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஆகும். அவை செல்களை ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து பாதுகாக்க உதவும்.

தேங்காயில் உள்ள "ஃபேட்டி ஆசிட்" உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்க உதவிடும்.

தேங்காய் சிரட்டையில் (வெளிப்புற ஓடு) இருந்து தயாரிக்கப்படும் ஒருவித எண்ணெய் தோல் வியாதிகளைக் குணப்படுத்துகிறது.

குறிப்பு:
தேசிய தேங்காய் தினம் கடைப்பிடிக்கப்படும் நாள் - ஜூன் 26.

நாமும் தேங்காயைப் போல, உட்புறத்தில் மென்மையாகவும், வெளிப்புறத்தில் வலுவாகவும் இருக்க வேண்டும்.

Follow Us On :-
Er. Thangamuthu Study Circle
Telegram : https://t.me/Thangamuthustudycircle