Get Mystery Box with random crypto!

தமிழகத்தின் புதிய ஆளுநர் தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நியமிக் | Er.THANGAMUTHU IPS ACADEMY & STUDY CIRCLE 💯📙📒🖊🖋🖋📝

தமிழகத்தின் புதிய ஆளுநர்


தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள உளவுத்துறை முன்னாள் உயரதிகாரியான ஆர்.என். ரவி, காவல் பணியிலும் நிர்வாகப் பணியிலும் தேர்ந்த அனுபவம் பெற்றவராக அறியப்படுகிறார். தற்போது அவர் நாகாலாந்து ஆளுநராக பதவி வகித்து வருகிறார்.

மேலும் தமிழகத்தின் முன்னாள் ஆளுநர் திரு. பன்வாரிலால் பரோகித் பஞ்சாப் மாநிலத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்..


Follow Us On :-
Er. Thangamuthu Study Circle
Telegram : https://t.me/Thangamuthustudycircle



மாநில ஆளுநர்கள் :

இந்தியாவின் மாநிலங்களில் ஆளுநர்களும், இந்தியாவின் ஆட்சிப்பகுதிகளில் துணை ஆளுநர்களும் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பெற்றுப் பணியாற்றுகின்றனர். ஆளுநர்கள் மற்றும் துணை ஆளுநர்கள் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை குடியரசுத்தலைவரால் நியமிக்கப்படுகின்றனர்.எனினும் ஆளுநரின் பதவிக்காலம் முடிவதற்குள் ஆளுநரை குடியரசுத் தலைவர் மாற்ற முடியும்.

ஒரு மாநிலம் குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் இருக்கும் போது அம்மாநில நிர்வாகத்தை தலைமை செயலாளரின் உதவியுடன் ஆளுநர் கவனித்து கொள்வார்.

இந்திய அரசியலில் ஆளுநர் என்ற சொல், நடுவணரசில் இந்தியக் குடியரசுத் தலைவரைப் போல் மாநிலவளவில் உள்ள ஒரு ஆட்சி செய்பவரைக் குறிக்கிறது.
இந்திய அரசியலமைப்புச் சட்ட விதி 153-ன் படி ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு ஆளுநர் இருப்பார்.

Follow Us On :-
Er. Thangamuthu Study Circle
Telegram : https://t.me/Thangamuthustudycircle
தகுதிகள் :

இந்தியாவின் குடிமகனாக இருத்தல் வேண்டும்.

35 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும்

மாநில சட்ட மன்றத்திலோ, நாட்டின் பாராளுமன்றத்திலோ உறுப்பினராக இருத்தல் கூடாது.

வேறு எந்த அரசு பொறுப்பிலும் இருக்க கூடாது.

இந்தியாவில் டெல்லி, புதுச்சேரி, அந்தமான் மற்றும் நிகோபார் ஆகிய மூன்று யூனியன் பிரதேசங்களுக்கு மட்டுமே துணை நிலை ஆளுநர்கள் நியமிக்கப்படுகின்றனர். துணை நிலை ஆளுநர்கள் மற்றும் மாநில ஆளுநர்கள் பெரும்பாலும் சமமான அதிகாரம் கொண்டவர்களாகவே உள்ளனர்

ஆளுநரின் முக்கிய பொறுப்புகள் :

பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு இருக்கும் ஒருவரை முதலமைச்சராக நியமிப்பது.

முதலமைச்சரின் பரிந்துரையின்படி மற்ற அமைச்சர்களை நியமிப்பது.

அந்தந்த மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம்|மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவரை நியமிப்பது.

மாவட்ட நீதிமன்றங்களின் நீதிபதிகளை நியமிப்பது

சட்டசபை கூட்டத்தொடரை கூட்டுவது மற்றும் ஒத்திவைப்பது

சட்டசபையை கலைப்பது (இது மரபுசார்ந்த ஒரு அதிகாரமேயன்றி, அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சரின் ஆலோசனையின்றி ஆளுநர் தன்னிச்சையாக இம்முடிவை எடுக்கமுடியாது.)

ஆளுநரே அம்மாநிலத்திலுள்ள எல்லா மாநில பல்கலைகழகங்களுக்கும் வேந்தர்(Chancellor) ஆவார்.

Follow Us On :-
Er. Thangamuthu Study Circle
Telegram : https://t.me/Thangamuthustudycircle