🔥 Burn Fat Fast. Discover How! 💪

Er.THANGAMUTHU IPS ACADEMY & STUDY CIRCLE 💯📙📒🖊🖋🖋📝

Logo of telegram channel thangamuthustudycircle — Er.THANGAMUTHU IPS ACADEMY & STUDY CIRCLE 💯📙📒🖊🖋🖋📝 E
Logo of telegram channel thangamuthustudycircle — Er.THANGAMUTHU IPS ACADEMY & STUDY CIRCLE 💯📙📒🖊🖋🖋📝
Channel address: @thangamuthustudycircle
Categories: Education
Language: English
Subscribers: 54.80K
Description from channel

1. Samacheer School Book based Test
2. Previous years Question papers discussion
3. Government exams updates
4. Daily current affairs with explanation
5. YouTube channel (Maths Shortcuts) https://www.youtube.com/channel/UCn2Skae84IWcoRIA0mvPslg

Ratings & Reviews

5.00

2 reviews

Reviews can be left only by registered users. All reviews are moderated by admins.

5 stars

2

4 stars

0

3 stars

0

2 stars

0

1 stars

0


The latest Messages 104

2021-09-26 05:32:42
# உலக ஆறுகள் தினம் - செப்டம்பர் 4 வது ஞாயிறு.
#WorldRiversDay
767 viewsedited  02:32
Open / Comment
2021-09-25 15:01:34
485 views12:01
Open / Comment
2021-09-25 05:49:23 # உடுமலை நாராயணகவி பிறந்த தினம் - செப்டம்பர் 25

சிறு குறிப்பு:

பெயர் - உடுமலை நாராயணகவி.
இயற்பெயர் - நாராயணசாமி
சிறப்புப் பெயர் - கவிராயர்
பிறந்த இடம் - உடுமலைப் பேட்டை
பிறந்த வருடம் - 1899
மறைந்த வருடம் - 23.5.1981.

வாழ்க்கை குறிப்பு:

விடுதலைப் போராட்டத்தின் போது தேசிய உணர்வு மிக்க பாடல்களை எழுதி மேடை தோறும் முழங்கியவர்;

முத்துசாமிக்கவிராயரின் மாணவர்; ஆரம்பக் காலத்தில் நாடகங்களுக்கு பாடல் எழுதினார்.

1933-ல் திரைப்படங்களுக்கு பாடல் எழுத ஆரம்பித்தவர்.

"நாராயணகவி" என்று பெயர் சூட்டிக்கொண்டு கவிஞர் இனமென்று தன்னை அடையாளம் காட்டிக் கொண்டவர்.

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு `கிந்தனார்’ கதாகாலட்சேபம் எழுதியதால் கலைவாணரின் குருவாக விளங்கியவர்.

Telegram : https://t.me/Thangamuthustudycircle

புகழ்பெற்ற கவிஞர் பாபநாசம் சிவனைவிட அதிகமாகப் பாடல்களை எழுதியவர்.

நாராயணகவியாவார். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கவிஞர் கண்ணதாசன் போன்றோர் இவருக்குப் பின்னர் வந்தவர்கள்.

சிறப்பு & விருதுகள்:

இந்திய அரசு உடுமலை நாராயணகவி நினைவை போற்றும் வகையில் 31.12.2008 இல் இந்திய அஞ்சல் துறை அஞ்சல்தலை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு இவர் வாழ்ந்த கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உடுமலை நாராயணகவி நினைவைப் போற்றும் வகையில் மணிமண்டபம் அமைத்துள்ளது.

இங்கு உடுமலை நாராயணகவியின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அவரது வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.

மறைவு:

இத்தகைய பெருமைக்குரிய உடுமலை நாராயணகவி 23.5.1981 அன்று இயற்கை எய்தினார்.

Follow Us On :-
Er. Thangamuthu Study Circle
Telegram : https://t.me/Thangamuthustudycircle
2.0K views02:49
Open / Comment
2021-09-24 15:38:13
DISCOUNT TEST @29.09.2021
CLASS STARTS @01-10-2021
ADMISSION IN PROGRESS
2.5K views12:38
Open / Comment
2021-09-24 15:28:10 #SSC_Selection_Phase_IX (Recruitment Notification PDF)
2.6K views12:28
Open / Comment
2021-09-24 15:08:00 GSCE-2021_opt.pdf
2.5K views12:08
Open / Comment
2021-09-24 09:24:21 #பம்மல் சம்பந்தனார் நினைவு தினம் - செப்டம்பர் 24.
#தமிழ் நாடகத் தந்தை

பம்மல் சம்பந்தம் 1873ம் வருடம் பிப்ரவரி 9ம் தேதி சென்னையில் பிறந்தவர்.

சம்பந்த முதலியார் மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அறங்காவலராக 1900 முதல் 1924ம் ஆண்டு வரை பணியாற்றினார்.

அவரது பதவிக்காலத்தில்தான் அக்கோயில் கோபுரம் கட்டப்பட்டது.

சென்னைப் பல்கலைக் கழகம், அண்ணாமலைப் பல்கலைக் கழகங்களில் செனட் அங்கத்தினராக இருந்தார்.

இந்து தர்ம சமாஜத்தில் பல ஆண்டுகள் அங்கத்தினராக இருந்து பணியாற்றி உள்ளார்.

சம்பந்தரின் 81ம் பிறந்தநாள் தமிழ்நாட்டில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

நாடகத்துறையில் பம்மல் சம்பந்தனார்:

பெல்லாரி ஸ்ரீ கிருஷ்ணமாச்சாரியார் என்பவரிடம் 'சரச விநோதினி சபா' எனும் நாடகக் கம்பெனி நடத்திய தெலுங்கு நாடகமே சம்பந்தர் தமிழ் நாடகம் எழுதக் காரணமாயிற்று.

கோவிந்தராவ் நாடகக் கம்பெனி நடத்திய 'ஸ்திரி சாகசம்' என்ற நாடகமே முதலியார் பார்த்த முதல் நாடகம்.

அந்த நாடகத்தையே 'புஷ்பவல்லி' என்ற பெயரில் சிறிது மாற்றி எழுதினார். அதுவே சம்பந்த முதலியார் எழுதிய முதல் நாடகம்.

சம்பந்த முதலியார் 94 நாடகங்கள் எழுதியுள்ளார். ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்துள்ளார்.

தன் நாடகங்களில் சிலவற்றில் செய்யுள், கீர்த்தனை முதலியவற்றையும் அறிமுகப்படுத்தினார்.

Telegram : https://t.me/Thangamuthustudycircle

1891ம் வருடம் ஜூலை மாதம், சுகுண விலாச சபை என்ற நாடகக் குழுவை உருவாக்கினார்.

இவரின் மிகவும் புகழ்பெற்ற நாடகம் "மனோஹரா" (1895)

இவர் "தமிழ் நாடகத்தின் தந்தை" எனப் போற்றப்படுகிறார்.

பம்மல் சம்பந்தனாரின் மறைவு:

தமிழ் நாடகக் கலைக்குப் புத்துயிர் ஊட்டிய பம்மல் சம்பந்த முதலியார் 24.9.1967 அன்று இறையடி சேர்ந்தார்.

சம்பந்த முதலியார் தன் இறுதிநாள் வரை படித்துக் கொண்டும் எழுதிக் கொண்டும் இருந்தார்.

விருதுகள் மற்றும் சிறப்புகள்:

1959 இல் சங்கீத நாடக அகாதமி விருது.

1916 இல் நாடகப் பேராசிரியர் என்ற விருது பெற்றார்.

1959 இல் "பத்மபூஷண்" என்ற பட்டத்தையும் பெற்றார்.

குறிப்பு:

தமிழ் நாடகத் தந்தை - பம்மல் சம்பந்தனார்.

தமிழ் நாடகத் தலைமையாசிரியர் - சங்கரதாஸ் சுவாமிகள்.

தமிழ் நாடகப் பேராசிரியர் - பரிதிமாற் கலைஞர்.

தமிழ் நாடக மறுமலர்ச்சித் தந்தை - கந்தசாமி.

Follow Us On :-
Er. Thangamuthu Study Circle
Telegram : https://t.me/Thangamuthustudycircle
616 views06:24
Open / Comment
2021-09-24 08:53:11
# நாட்டு நலப்பணித் திட்ட தினம் - செப்டம்பர் 24.
#NationalServiceScheme
#NSS

இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் கல்வி அமைச்சராக இருந்த வி. ஆர்.வி. ராவ் அவர்களால் 1969 ஆம் ஆண்டு செப்டம்பர் 24 அன்று நாட்டு நலப்பணித்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்நாள் நாட்டு நலப்பணித் திட்ட தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.

சமூக சேவை மூலம் ஆளுமையை வளர்ப்பதே இத்திட்டத்தின் முக்கியமாக நோக்கம் ஆகும்.

இந்த திட்டம் மாணவர்களுக்கு சமூக நல எண்ணங்களை கற்பிக்கவும், எந்தவித பாரபட்சமும் இல்லாமல் சமூகத்திற்கு சேவை செய்வதற்கும் அமைக்கப்பட்டது.

உதவி தேவைப்படுபவர்களுக்கு தக்க நேரத்தில் உதவி புரிந்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திட இத்திட்டம் வழிவகை செய்கிறது.

விடுதலைப் போராட்டத்தின் போது இளைஞர்கள் செய்த, பெரும் தியாகங்களை போன்றே எதிர்காலத்திலும் செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் இளைஞர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட ஒரு சீரிய திட்டமே நாட்டு நலப்பணி திட்டமாகும்.

Follow Us On :-
Er. Thangamuthu Study Circle
Telegram : https://t.me/Thangamuthustudycircle
774 views05:53
Open / Comment
2021-09-24 07:02:37 # உலக கடல்சார் தினம் - செப்டம்பர் 24.
#WorldMaritimeDay

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 'கடைசி வியாழக்கிழமை' அன்று உலக கடல்சார் தினமானது அனுசரிக்கப்படுகிறது.

கப்பல் பாதுகாப்பு கடல்சார் பாதுகாப்பு மற்றும் கடல் சூழலின் முக்கியத்துவம் குறித்த கவனம் செலுத்துவதற்காக இத்தினம் கொண்டாடப்படுகிறது.

இத்தினமானது உலகின் பொருளாதாரத்திற்கு அதிலும் குறிப்பாக கப்பல் போக்குவரத்திற்கு சர்வதேச கடல்சார் தொழில்துறையில் பங்களிப்பை பறை சாற்றுகிறது.

சர்வதேச கடல்சார் அமைப்பு (International Maritime Organization) ஒப்பந்தத்தின் 20-வது ஆண்டு நிறைவை குறிக்கும் வகையில் இத்தினம் 1978ஆம் ஆண்டு முதல் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

Telegram : https://t.me/Thangamuthustudycircle

IMO-வின் தற்போதைய பொதுச்செயலாளர் கிடாக் லிம் ஆவார். (2016 முதல்)

ஆஸ்திரேலியா, கனடா, UK, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் உலக கடல்சார் நாள் (World Maritime Day is celebrated) கொண்டாடப்படுகிறது.

2021 Theme : "Seafarers: at the core of shipping's future"
"கடற்படையினர்: கப்பல் போக்குவரத்தின் எதிர்காலத் தூண்கள்"

குறிப்பு:

இந்தியாவில் ஆண்டுதோறும் ஏப்ரல் 5 ஆம் தேதி தேசிய கடல்சார் நாள் (National Maritime Day 2020) கடைப்பிடிக்கப்படுகிறது.

1919 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 5 ஆம் நாளன்று இந்தியாவின் முதல் நீராவிக் கப்பல் (எஸ்.எஸ்.லாயல்டி) மும்பையிலிருந்து லண்டனுக்குச் சென்றது. அதன் நினைவாக 1964 ஆண்டு முதல், ஏப்ரல் 5ம் நாளானது "தேசிய கடல்சார் நாளாகக்" கொண்டாடப்படுகிறது.

Follow Us On :-
Er. Thangamuthu Study Circle
Telegram : https://t.me/Thangamuthustudycircle
1.3K views04:02
Open / Comment