Get Mystery Box with random crypto!

TnpscBooks

Channel address: @tnpscbooks_official
Categories: Education
Language: English
Subscribers: 280.77K
Description from channel

Instagram page : https://instagram.com/tnpscbooks?igshid=18pmj9k47ujts
TNPSC GROUP EXAM QUESTION
Current affir
Geography
Economy
Aptitude
History
Polity

Ratings & Reviews

3.67

3 reviews

Reviews can be left only by registered users. All reviews are moderated by admins.

5 stars

1

4 stars

1

3 stars

0

2 stars

1

1 stars

0


The latest Messages 19

2023-02-03 05:37:20 TNPSC New Notification 2023

Combined Engineering
Subordinate Services Examination- 1083 Vacancy
12.1K viewsedited  02:37
Open / Comment
2023-02-01 18:45:43 Tnpsc Librarian Recruitment 2023
15.4K views15:45
Open / Comment
2023-02-01 18:45:14 UPSC IAS Notification 2023
15.5K views15:45
Open / Comment
2023-01-25 15:48:36 TNPSC - TOURIST OFFICER  பணிக்கான அறிவிப்பு...
31.4K views12:48
Open / Comment
2023-01-19 17:19:26 எஸ்எஸ்சி எனும் மத்திய பணியாளர் ஆணையம் SSC தேர்வு, தமிழில் எழுத அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் கணினி வழி, பல்திறன் மல்டி டாஸ்கிங்  (MTS) தேர்வு, தமிழில் எழுத அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே இந்த SSC தேர்வு எழுதப்பட்டுவந்த நிலையில், தற்போது தமிழ் உட்பட 13 மொழிகளில் எழுத அனுமதி கிடைத்துள்ளது.

SSC மல்டி டாஸ்கிங் (பல்திறன்) தேர்வு, காலியாக உள்ள 11,409 பணியிடங்களை நிரப்பும் வகையில் நடைபெறவுள்ளது. இந்த தேர்வு இனி தமிழிலும் எழுத, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அனுமதி அளித்துள்ளது.
6.2K views14:19
Open / Comment
2023-01-14 10:49:29 சில விரிவாக்கம் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.. குறிப்பாக TASMAC, TWAD Etc....

இன்டர்வியூ அன்னைக்கு டீசல், பெட்ரோல் , தங்கம், வெள்ளி விலை எவ்வளவு என தெரிந்துகொள்ளவேண்டும்..இன்டர்வியூ அன்னைக்கு செய்திதாள் கண்டிப்பாக படித்து செல்லவேண்டும்..

Follow TELEGRAM Group http://bit.ly/tnpscbooks_official

Ug/Pgல் நாம் செய்த project பற்றி ஒரு ரிவிசன் செய்துகொள்ளுங்கள். Fav subject என்ன என்ற கேள்வி கேட்டால் என்ன subject சொல்லலாம் என முன்னரே திட்டமிட்டுக்கொள்ளுங்கள்..அந்த subject ல் தெளிவாக இருங்கள்...

துறை பற்றிய technical term பற்றி தெரிந்து கொள்ளுங்கள். உதாரணமாக highwaysல் WMM, WBM, camber, carraigeway etc.. WRD எனில் ayacut, capacity, catchment, waterspread area etc.. buildings எனில் brick, king closer,queen closer etc.

வேலை கிடைத்தால் Honest ஆக இருப்பீர்களா என கேட்டால் கண்டிப்பாக இருப்பேன் சார் என பதில் சொல்லுங்கள்.

இறுதியில் அவர்கள் ஓகே நீங்கள் செல்லுங்கள் என சொல்லும்போது எல்லோருக்கும் தனித்தனியாக நன்றி தெரிவித்துக்கொண்டு வெளியே சென்று கதவினை சாத்துங்கள். கதவினை சாத்தும்போது எவ்வித சத்தமின்றி பொறுமையாக சாத்துங்கள்...

Follow TELEGRAM Group http://bit.ly/tnpscbooks_official

நம்முடைய பல்வேறு கஷ்டங்களினை கடந்து இந்த நிலைமைக்கு வந்திருக்குறீர்கள்..இதற்கே நீங்களே உங்களை பாராட்டிக்கொள்ளுங்கள்..பாதி கிணறை நீங்கள் தாண்டி விட்டீர்கள் மீதி கிணறை தாண்டுவதற்கு இந்த இரண்டு மாதங்கள் சரியாக பயன்படுத்தி கொள்ளுங்கள்.. கண்டிப்பாக இறுதியில் அனைவரும் வேலைக்கு செல்லபோகிறீர்கள்..அந்த நாள் வெகு தொலைவில் இல்லை.... சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள்

நன்றி
12.2K views07:49
Open / Comment
2023-01-14 10:49:29 பெரும்பாலும் பலருக்கு இன்டர்வியூக்கு என்ன படிக்க வேண்டும் எவ்வாறு தயாராகவேண்டும் என்ற சந்தேகம் இருக்கும்..வழக்கம்போல இதற்கும் சிவில் மற்றும பொது அறிவினை நன்கு தெரிந்துகொள்ள வேண்டும். சிவிலினை பொறுத்தவரை ஃபார்முலா மற்றும் values போன்றவற்றில் கவனம் செலுத்தாமல் technical termனை பற்றி அதிகமாக கற்றுக்கொள்ளுங்கள்..

முதலில் நம் notificationல் உள்ள highways, WRD, Buildings, RD, Housing board போன்ற துறைகளை பற்றி overview தெரிந்துகொள்ளுங்கள்..

எந்த துறையே நீங்கள் தேர்ந்தெடுக்க விரும்புகிறீர்கள் என கேள்வி கேட்டால் , எந்த துறையே தேர்ந்தெடுக்கலாம் என நீங்கள் முன்னரே திட்டமிட்டு வைத்திருந்து அந்த துறையினை பற்றி அதிகம் தெரிந்துகொள்ளங்கள்.இப்போது நமது நணபர்கள் அனைத்து துறையிலும் வேலைபார்ப்பதால் சந்தேகங்களை எளிதில் கேட்டு தெரிந்துகொள்ளலாம்.

ஒருநாள் முழுவதும் என்ன prepare பண்ணுகிறோமோ அதனை குறைந்தது ஒரு மணிநேரமாவது மற்றவர்களுடன் discuss பண்ணுங்கள். ஏனெனில் இன்டர்வியூ என்பது நாம் மற்றவர்களிடம் தம் பதிலை எப்படி பதிவு செய்கிறோம் என்பதை பொறுத்ததே..பெரும்பாலும் இன்டர்வியூவில் introduce ur self என்ற கேள்வி தான் முதலில் இடம்பெறும். எனவே அதில் அதிக அளவில் கவனம் செலுத்தி நீங்கள் அடிக்கடி சொல்லி பாருங்கள், மற்றவர்களிடம் சொல்லி பழகுங்கள். ஏனெனில் பழக பழகதான் பாலும் புளிக்கும்.

அம்மா, அப்பா பற்றி கேள்வி வந்தால் அம்மா home makker சொல்லலாம், அப்பா விவசாயம் என சொன்னால் விவசாயத்தை பற்றியும் தெரிந்துகொள்ளுங்கள். இப்போது உங்கள் நிலத்தில் என்ன விவசாயம் பண்றீங்க, என்ன உரம் போடுறீங்க எவ்வளவு விளைச்சல் இதுமாதிரி...

உங்களது சொந்த மாவட்டத்தினை பற்றி நிறைய தெரிந்துகொள்ளுங்கள், கல்யாணம் ஆனவர்களாக இருந்தால் கணவரின் மாவட்டம் பற்றியும் தெரிந்துகொள்வது நல்லது. தன் மாவட்டத்தின் சிறப்பு, பெயர்க்காரணம், தன் மாவட்டத்தில் பாயும் ஆறுகள்,முக்கிய தொழிற்சாலைகள், முக்கிய சாலைகள் மற்றும் சாலையின் நம்பர்(NH/SH), தனது மாவட்டத்திலுள்ள சுதந்திரபோராட்ட வீரர்கள் மற்றும் பல.....

உங்களது பொழுதுபோக்கு என்னவென்று கேட்டால் என்ன சொல்லவேண்டும் என்பதை முன்கூட்டியே திட்டமிட்டுக்கொண்டு அதை பற்றி நிறைய தெரிந்து கொள்ளுங்கள். உதாரணமாக புத்தகம் படிப்பது என்று நீங்கள் சொன்னால் நிறைய புத்தகம் மற்றும் ஆசிரியர்கள் பற்றி தெரிந்து கொள்ளவேண்டும்.. சமையல் பிடிக்கும் என நீங்கள் கூறினால் சமையலினை பற்றியும் நீங்கள் அதிகம் தெரிந்துகொள்ள வேண்டும்

தற்போதைய நடப்பு நிகழ்வுகள் பற்றி அதிகம் தெரிந்து கொள்ளுங்கள். தினமும் செய்தித்தாள் படிங்கள் சில YouTube சேனலினை தொடர்ந்து follow பண்ணுங்க..பாரப்பதை படிப்பதை ஒரு நோட்டில் எழுதிவைத்து திரும்ப திரும்ப அதை பாருங்கள்..நீங்கள் இனிமேல் சமுதாயத்தில் பார்க்கும், கேக்கும் அனைத்தையும் ஒரு கேள்வியாக பாருங்கள்...

Opinion கேள்விகள் சிலநேரம் வர வாய்ப்புண்டு. அவ்வாறு வரும்போது நடப்பு ஆட்சிக்கு எதிர்மறையாக கூறுவதை தவிருங்கள்.

Follow TELEGRAM Group http://bit.ly/tnpscbooks_official

தற்போதைய MLA மற்றும் அமைச்சர்களின் பெயர்களை கேக்கும்போது *மாண்புமிகு திரு* என்று சொல்லி அவரது பெயரை சொல்லி பழகுங்கள். இன்றைய ஒவ்வொரு துறைகளின் அமைச்சர் பெயரினையும் தெரிந்து கொள்ளுங்கள்..உங்கள் தொகுதி எம்.எல்.ஏ பற்றி அதிகம் தெரிந்து கொள்ளுங்கள்..

நடிப்பு மாதத்தில் குடியரசு தின விழா வருவதால் அதனை பற்றி நிறைய தெரிந்து கொள்ளுங்கள், அன்றைய தினத்தில் கிராமசபை கூட்டம் நடைபெறுவதால் அதனை பற்றியும் நிறைய தெரிந்து கொள்ளுங்கள்.. தற்போது வருடத்தில் 5 நாட்களில் கிராமசபை கூட்டம் நடைபெறுகிறது.

எந்த கல்லூரியில் படிததீர்கள் என்ற கேள்வி கேட்டால் நாம் அண்ணா யுனிவர்சிட்டி என பதில் சொல்லும்போது அறிஞர் அண்ணாவினை பற்றி சொல்லுங்கள் என்ற கேள்வி கூட வரலாம் எனவே முக்கிய நபர்களை பற்றி அதிகம் தெரிந்துகொள்ளுங்கள்..குறிப்பாக பெண் விடுதலை போராட்டவீரர்கள் பற்றி அதிகமாக தெரிந்து கொள்ளுங்கள். NSS,NCC,Engineers day பற்றி நிறைய தெரிந்தது கொள்ளுங்கள்..

உங்களுடைய பெயரினை பற்றி படியுங்கள்.. குறிப்பாக உங்கள் பெயர் பாரதி எனில் மகாகவி பாரதியினை பற்றி கேள்விகள் வரலாம். உங்களது பெயருக்கு என்ன பெயர்காரணம் என கூகுளில் தேடிப்பிடித்து தெரிந்து கொள்ளுங்கள். உங்களது பிறந்ததேதியின் சிறப்பினை பற்றியும் தெரிந்துகொள்ளுங்கள்.. உதாரணமாக உங்கள் பிறந்தநாள் ஜுன் 21 எனில் அன்று யோகா தினம்..எனவே அதனை பற்றி தெரிந்துகொள்வது அவசியம்.

உங்கள் மாவட்டத்தில் ஏதேனும் dam, reservoir, இருந்தால் அதனை பற்றி முழுவிவரம் தெரிந்துகொள்ளுங்கள். மிகப்பெரிய/ மிகச்சிறிய சிறப்புகளை தெரிந்து கொள்ளுங்கள்.. உதாரணமாக மிகப்பெரிய ஆறு, மிகப்பெரிய மலை, மிகப்பெரிய மண்அணை இதுமாதிரியான கேள்விகள்..
11.7K views07:49
Open / Comment
2023-01-14 10:49:29 TNPSC AE - Selected Candidates

வணக்கம் நண்பர்களே...

இந்த உதவிப்பொறியாளர் எழுத்துத்தேர்வில் தேர்ச்சிபெற்று அடுத்த கட்டத்திற்கு முன்னேறியதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். .

தேர்வு எழுதிய 40000-ற்கு மேற்பட்டவர்களில் 2000பேரில் ஒருவராக நீங்கள் தேர்வு செய்யப்பட்டபோது நீங்கள் பாதி வெற்றியடைந்து விட்டீர்கள், இந்த பாதி வெற்றியை முழுவெற்றியாக மாற்றும் தருணம் இது..

அடுத்து நீங்கள் என்ன செய்யவேண்டும் என்றால் தங்களுடைய பள்ளி, கல்லூரி சான்றிதழ்களை தயார் நிலையில் வைத்துக்கொள்ளுங்கள்.. ஏதேனும் சேதமடைந்திருந்தாலோ அல்லது காணாமல் போயிருந்தாலோ இன்றே அதை திரும்ப பெறுவதற்கான முயற்சியில் இறங்குங்கள்..

நடந்துமுடிந்த எழுத்துத்தேர்வானது நாம் எவ்வாறு அதை தேர்வு அறையில் எழுதினோம் என்பதை பொறுத்தது, ஆனால் இன்டர்வியூ என்பது நமக்கென்று ஒதுக்கப்பட்ட 15 முதல் 20 நிமிடங்களில் எவ்வாறு தெளிவாக, பதட்டப்படாமல், தைரியமாக, தெளிவாக தன்னுடைய பதிலை கூறுகிறோம் என்பதை பொறுத்ததே.. கேள்வி கேட்பவர்கள் நம்மிடம் சரியான பதிலை எதிர்பார்ப்பதில்லை, அந்த சூழ்நிலையை எவ்வாறு கையாளுகிறோம் என்பதையே எதிர்பார்க்கின்றனர்... எனவே நாம் சொல்வது தவறான பதிலாக இருக்குமோ என பயப்படத்தேவையில்லை...

Follow TELEGRAM Group http://bit.ly/tnpscbooks_official

எழுத்துத்தேர்வில் 1:3/1:4-ல் தானே கூப்பிட்டு இருக்கிறார்கள் நமக்கு வேலை கிடைக்குமா கிடைக்காதா என்ற தேவையில்லாத சிந்தனைகளை மனதில் வளர்க்காதீர்கள்... அவ்வாறு உங்களிடம் பேசுபவர்களிடமிருந்து சற்றே விலகியிருங்கள்..

எழுத்துத்தேர்வு என்பது முடிந்துபோன ஒன்றாகும்..அதை இனிமேல் யார்நினைத்தாலும் மாற்றமுடியாது..எனவே நாம் writtenல் எவ்வளவு மார்க் வாங்கியிருப்போம் ஒருவேளை கம்மியாக வாங்கியிருப்போமோ என்றெல்லாம் நினைக்காமல் இன்டர்வியூவில் முழுக்கவனம் செலுத்துங்கள்...

தற்போதைய முறைப்படி இன்டர்வியூ ஆனது 60 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது..இதனை ஐந்து slot ஆக பிரிக்கின்றனர். முதல் slotற்கு 45 மதிப்பெண்களும், இரண்டாம் slotற்கு 40.5 மதிப்பெண்களும், மூன்றாவது slotற்கு 36 மதிப்பெண்களும் நான்காவது slotற்கு 31.5 மதிப்பெண்களாகவும்,ஐந்தாவது slotற்கு 27 மதிப்பெண்களாகவும் பிரிக்கப்படுகிறது.. ஒவ்வொரு slotற்கும் 4.5 மதிப்பெண்கள் வித்தியாசம்...0.25 or0.5 மதிப்பெண்ணில் வேலையினை தவறவிட்டவர்கள் நிறையபேர், எனவே அனைவருடைய குறிக்கோளும் இன்டர்வியூவில் முதல் slot மதிப்பெண் வாங்குவதிலேயே இருக்க வேண்டும்..

இன்டரவியூவில் ஒரு கேள்வி கேட்கும்போது அதற்கு பதில் தெரியவில்லை எனில் "சாரி சார் எனக்கு தெரியவில்லை, refer பண்ணிக்கிறேன்" என்று கூறுங்கள். மாறாக தெரிந்தமாதிரி காமித்துக்கொண்டு உளறவேண்டாம், தெரயும் என பொய் சொல்லி தடுமாறவும் வேண்டாம்..

Follow TELEGRAM Group http://bit.ly/tnpscbooks_official

நமக்கு முன்னே அமர்ந்து நம்மிடம் கேள்வி கேட்பவர்கள் நம்மை போன்ற ஆயிரக்கணக்கான candidatesனை பார்த்திருப்பார்கள், நம் முகத்தை பார்த்தே கணிக்கும் திறன் கொண்டவர்கள், எனவே நமக்கு பதில் தெரிந்தால் தெரிந்த பதிலை தெளிவாக, தைரியமாக,பதட்டம் இல்லாமல் சொல்லுங்கள், ஒருவேளை பதில் தெரியவில்லை எனில் தெரியவில்லை என்றே கூறுங்கள், தவறேதுமில்லை...

பெரும்பாலும் பலருக்கு வரும் சந்தேகம் இன்டர்வியூவில் கேட்கும் கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் பதில் கூறவேண்டுமா என்பதே.. நாம் ஆங்கிலத்தில்தான் கூற வேண்டும் என்ற கட்டாயமில்லை.. ஒருவேளை அவர்கள் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டாலும் நாம் தமிழிலே பதில் அளிக்கலாம்...

நீங்கள் இன்டர்வியூ அறைக்குள் நுழையும் முதல் நொடி முதல் இன்டர்வியூ முடிந்து வெளியேறும் கடைசி நொடிவரை நாம் கண்காணிக்கப்படுகிறோம் என்பதனை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்..நாம் அணிந்திருக்கும் ஆடை, கையில் கட்டியிருக்கும் கடிகாரம், காலில் அணிந்திருக்கும் shoe, நெற்றியில் வைத்திருக்கும் பொட்டு/திருநீறு முதற்கொண்டு அனைத்தும் கண்காணிக்கப்படுகிறது..

இன்டர்வியூ அறைக்குள் நுழையும் போது உள்ளே வரலாமா சார்/மேடம் என கேட்டு உள்ளே செல்லுங்கள்.. உள்ளே சென்றவுடன் அனைவருக்கும் தனித்தனியே காலை/மதிய வணக்கம் தெரிவியுங்கள்.. பின்னர் அவர்கள் அமரசொன்னவுடன் நன்றி கூறி அமருங்கள், ஒருவேளை அவர்கள் அமர சொல்லவில்லை எனில் அமரலாமா என கேட்டு உட்காருங்கள்.. உட்காரும் போது நாற்காலியினை இழுத்து தேவையில்லாத இரைச்சலை உண்டாக்க வேண்டாம்..

ஒருவர் கேள்வி கேட்டு நீங்கள் பதில் சொல்லிக்கொண்டிருக்கும்போது வேறோருவர் கேள்வி கேட்டால் இவருக்கு பதில் முழுமையாக சொல்லிவிட்டே அடுத்த நபரின் கேள்விக்கு பதில் சொல்ல ஆரம்பியுங்கள்....

நாம் என்ன பதில் செல்கிறோமோ அதிலிருந்து தான் அவர்களின் அடுத்தகேள்விகள் வரும். எனவே நாம் சொல்லும் பதில்களை சற்றே யோசித்து தெளிவாக சொல்லுவோம்

Follow TELEGRAM Group http://bit.ly/tnpscbooks_official
10.3K views07:49
Open / Comment
2023-01-13 13:45:15 TNPSC Results

POSTS INCLUDED IN
COMBINED ENGINEERING SERVICES EXAMINATIONS
17.8K viewsedited  10:45
Open / Comment
2023-01-13 10:05:00 TNPSC New Notification - Road Inspector in Rural & Panchayat Raj Department
21.0K views07:05
Open / Comment